உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

நற்றிணை தெளிவுரை


'துஞ்சாயோ, என் குறுமகள்?' என்றலின்,

5

சொல்வெளிப் படாமை மெல்லஎன் நெஞ்சில் 'படுமழை பொழிந்த பாறை மருங்கில் சிரல்வாய் உற்ற தளவின், பரல்அவல் கான்கெழு நாடற் படர்ந்தோர்க்குக் கண்ணும் படுமோ? என்றிசின், யானே.

10

ஏட தோழி! யான் சொல்லும் இவற்றையும் கேட்பா யாக: நேற்றிரவுப் போதிலே மிக்க ஆசையானது வருந்த வெய்துயிர்த்தேனாக, அம்புபட்ட மான் பிணையினை யொப்ப வருத்தியிருந்தேன். அன்னையும், யானுற்ற துயர மிகுதியை அறிந்தாள்போல, "என் இளைய மகளே! தூங்காயோ? என்றனள், அவளுக்கு என் நிலையைக் கூறக் கருதிய யாள் கூறின் ஏதமாகும் என. எழுந்த சொல் வெளிப் படாவாறு அடக்கிக் கொண்டேன். என் நெஞ்சிற் குள்ளாகவே, "மிக்க மழை பொழிந்த கற்பாறைப் பக்கத்தே பூத்த, சிச்சிலிப் பறவையின் மூக்குப் போன்ற அரும்புகளை யுடைய முல்லையும், பருக்கைக் கற்களை உடைய பள்ளங் களும் விளங்கும் காடு சூழ்ந்த நாட்டினை உடையானாகிய தலைவனைக் கருதியிருக்கும் எண் போன்நோர்க்குக் கண்ணும் உறங்குமோ?' என்று சொல்லிக்கொண்டேன்.

கருத்து: 'ஐயுற்றவளான அன்னை, முற்றவும் அறியின், இச் செறிப்பு நேரும்; எனவே, அவர் விரையவந்து மணந்து அழைத்துப் போகமாட்டாரோ?" என்பதாம்.

சொற்பொருள் : வேணவா - வேட்கையால் உண்டாகிய பேரவா. ஏ - அம்பு. துயர் மருங்கு - துயரத்தின் நிலை. குறுமகள் - இளைய மகள். படுமழை - பெருமழை. சிரல்- சிச்சிலிப் பறவை.

விளக்கம் :

  • அல்கல் ஏமான் பிணையின் வருந்தி ளெனாக' என்று, நான் இரவு முற்றவும் துயருற்றுக் கண்படுதலின்றி வாடியழிந்ததனைக் கூறினாள். அன்னை அறிந்தனள்போல' என்று. அன்னை அறிந்தனளாயின் நேரிடும் இற்செறிப்பையும் உணர்த்தினாள். படுமழை பொழிந்த' என, அவன் வரும் வழியது எதத்தை நினைந்து கவலையுற்றதனைக் கூறினாள். இதனால், இனி குறியே வாயாதென்பதும் விரைய மணந்துகொள்னலே செய்யத் தக்கதென்பதும் தலைவனுக்கு வலியுறுத்தினாளாம்.

இரவுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/123&oldid=1627245" இலிருந்து மீள்விக்கப்பட்டது