உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

125


இச் செய்யுளை எடுத்துக்காட்டி, 'இவை தலைவிகண் நிகழ்ந்தனவும், அவள் தன்மையும், பின்னர்த் தலைவன் நினைந்து செலவழுங்குதற்கு நிமித்தமாயவாறு காண்க' எனக் கூறுவர் நச்சினார்க்கினியர். ஆசிரியர் இளம்பூரண அடிகளும், இச்செய்யுளை இச்சூத்திரத்திற்கே மேற்கோளாகக் காட்டியுள்ளனர் (தொல். பொருள். இளம்.சூ.46 உரை)

63. தொடர்பும் பசலையும்!

பாடியவர் : உலோச்சனார்.
திணை : நெய்தல்.
துறை : அலர் அச்சத்தால் தோழி சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீ இயது.

[(து–வி.) தலைவன் சிறைப்புத்தானாகத் தோழி தனக்குத் தானே சொல்விக் கொள்வாளாய், அவனும் கேட்டுத் தெளிவுற்றுத் தலைவியை விரைந்து வரைந்து கொள்ளற்கு முனையுமாறு இவ்வாறு உரைக்கின்றாள்.]

உரவுக்கடல் உழந்த பெருவலைப் பரதவர்
மிகுமீன் உணக்கிய புதுமணல் ஆங்கண்
கல்லென் சேரிப் புலவற் புன்னை
விழவுநாறு விளங்கிணர் அவிழ்ந்துடன் கமழும்
அழுங்கல் ஊரோ அறன் இன்று; அதனால் 5
அறன்இல் அன்னை அருங்கடிப் படுப்பப்
பசலை ஆகி விளிவது கொல்லோ?
புள்ளுற ஓசிந்த பூமயங்கு அள்ளல்
கழிச்சுரம் நிவக்கும் இருஞ்சிறை இவுளித்
திரைதரு புணரியின் கழூஉம் 10
மலிதிரைச் சேர்ப்பனொடு அமைந்தநம் தொடர்பே?

பெருவலையினைக் கொண்டோராக, வலியுடைய கடலிடத்தே சென்று வருந்தியவரான பரதவர்கள், மிகுதியான மீன்வேட்டத்தோடு சேரிக்குத் திரும்புவார்கள். அம்மிகுதியான மீன்களை உணக்கியபடியே நாம் காத்திருக்கும் புதுமணற்பாங்கான அவ்விடத்தே, கல்லென்னும் ஆரவாரத்தையுடைய நம் சேரியை அடுத்திருக்கும் புலவுநாற்றத்ததான புன்னை மரமும் நிற்கும். அதனின்றும், விழவுக்குரிய நறுமணம் பெற்று விளங்கும் பூங்கொத்துக்கள் ஒருசேர இதழவிழ்ந்து மணம் கமழ்ந்துகொண்டிருக்கும். ஆயின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/126&oldid=1677458" இலிருந்து மீள்விக்கப்பட்டது