உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

நற்றிணை தெளிவுரை


போலத், தலைவியின் இல்லத்தார் உவக்கத் தலைவனும் வரைபொருளை மிகுதியாகச் சொரிந்து வழங்குவான் என்பதாம்.

(2) அவ்வேளை, வீழ்தாழ் தாழைப்பூக் கானலிடைக் கமழ்தலைப் போலத் தலைவியின் மணச்செய்தியும் ஊர் முழுக்கப் பரந்து சிறப்பெய்தும் என்பதுமாம்.

(3) 'கோட்சுறா வழங்கும் வாட்கேழ் கருங்கழி' என்றது தலைவியைக் காவலுட்படுத்திக் காத்திருக்கும் ஐயன்மாரின் வன்செயலை நினைந்ததாம். அவ்விடத்து, நெய்தல் மலரிடைப் பொன் சொரியும் புன்னை போன்று, தலைவனும் அவரால் ஏதும் துன்புறாதே வந்து தகப்பன்பாற் பொருள் தந்து தலைவியை அவன் கொடுக்க அடைவான் என்பதாகும்.

79. எப்படித் தடுப்போம்?

பாடியவர் : கண்ணகனார்.
திணை : பாலை.
துறை : பிரிவுணர்ந்து வேறுபட்ட தலைமகள், தோழிக்குச்

சொல்லியது.

[(து—வி.) தலைவன் தன்னைப் பிரிந்து போதற்கு நினைந்தானாதலை அறிந்து வருந்தி நலனழிந்தாள் ஒரு தலைமகள். அவள், தன்னைப்பற்றி உசாவிய தோழிக்குத் தன் வருத்தத்தை இப்படிக் கூறுகின்றாள்.]

'சிறைநாள் ஈங்கை உறைநனி திரள்வீக்
கூரை நம்மனைக் குறுந்தொடி மகளிர்
மணல்ஆடு கழங்கின், அறைமிசைத் தாஅம்
ஏர்தர லுற்ற இயக்குஅருங் கவலைப்
பிரிந்தோர் வந்துநப் புணரப் புணர்ந்தோர்
பிரிதல் சூழ்தலின், அரியதும் உண்டோ?'
என்றுநாம் கூறிக் காமம் செப்புதும்;
செப்பாது விடினே, உயிரொடும் வந்தன்று—
அம்ம! வாழி, தோழி!—
யாதனின் தவிர்க்குவம் காதலர் செலவே?

தோழி! நீதான் வாழ்க! "மனைக்கு வேலியாக அமைந்துள்ளன ஈங்கை. அந்த ஈங்கையின் தேன்துளிகளை மிகவுடைய திரண்ட நாள் மலர்கள், கூரையிட்ட நல்ல மனைக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/157&oldid=1679098" இலிருந்து மீள்விக்கப்பட்டது