உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

நற்றிணை தெளிவுரை


மல்லாக் காலத்துப் பிரிதலாக இருத்தலின், இதனை அரசவினை கருதிப் பிரித்த பிரிவாகக் கொள்க. இது குறித்தே, 'மறவர் வேலென விரிந்த கதுப்பின் தோல் பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும் கடும்பனி அற்சிரம்' என்று, அது காலைப் பிரிவாற்றாமையால் தலைவி துயருற்ற தன்மையினைக் கூறினளாம்.

87. அதுவும் கழிந்ததே!

பாடியவர் : நக்கண்ணையார்.
திணை : நெய்தல்.
துறை : வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாகிய தலைவி கனாக்கண்டு தோழிக்கு உரைத்தது.

[(து–வி) வரைவினை இடைவைத்து. வரைபொருளின் பொருட்டாகப் பிரிந்து சென்றிருந்தான் தலைவன். பிரிவாற்றாமையினோலே தளர்ந்த தலைவி, ஒரு நாட் பகலிலே, தான் கண்ட கனாவினைத் தன் தோழிக்கு உரைத்து, இவ்வாறு புலம்புகின்றாள்.]

உன்ஊர் மாஅத்த முள்எயிற்று வாவல்
ஓங்கல் அம்சினைத் தூங்குதுயில் பொழுதின்
வெல்போர்ச் சோழர் அழிசிஅம் பெருங்காட்டு
நெல்லிஅம் புளிச்சுவைக் கனவி யாஅங்கு
அதுகழிந் தன்றே தோழி; அவர்நாட்டுப் 5
பனிஅரும்பு உடைந்த பெருந்தாட் புன்னைத்
துறைமேய் இப்பி ஈர்ம்புறத்து உறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்
பெருந்தண் கானலும் நினைந்தஅப் பகலே.

தோழி! அத் தலைவரது நாட்டிடத்தேயுள்ள பெருத்த அடியையுடைய புன்னையினது குளிர்ந்த அரும்புகள் தலையுடைந்தவாய் மலர்ச்சி பெற்றன; அவற்றினின்றும் உதிர்கின்ற பூந்தாதுகள் கடற்றுறையிடத்தே மேய்ந்தபடியிருக்கும். இப்பியினது குளிர்ச்சிகொண்ட மேற்பக்கத்தே வீழ்ந்து அதனை அழகுபடுத்தின; அத்தகைய பெரிதான குளிர்ச்சியைக் கொண்ட கானற் சோலையினையும், அக்காட்சியைக் கண்டு இன்புறும் சிறுகுடியினரான பரதவரின் மகிழ்ச்சியையும் நினைத்தபடியே யானும் உறங்கிப் போயினேன். அப்படி நினைந்த அந்தப் பகற்போதிலேயே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/173&oldid=1681603" இலிருந்து மீள்விக்கப்பட்டது