உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

நற்றிணை தெளிவுரை


கண் மிகுதியான துன்பத்தை நுகர்ந்தவும், செவ்வரி படர்ந் தவும், மதர்த்த குளிர்ச்சித் தகைமையுடையவுமான களை உடையவள்; பலவாகிய பூக்களுடனே மாறுபட்ட வண்ணத்தைத் தேர்ந்து தொகுக்கப்பட்ட தழையுடை யானது அசைந்தபடியே இருக்கும் அல்குல் தடத்தினை உடையவள்; அழகிய நீலமணியைப் போன்று விளங்கும் கார்மேனியினை உடையவள்: இளையோளாகிய நம் காதலியான இவள்தான் யாவரது மகளாவாளோ? தளராத உள்ளத் திண்மையினையுடைய எம்மையே காமத் துயரத் திலே அழுந்தச் செய்தனளே! இத்தகையாளைப் பெற்று வளர்த்து எனக்கு உதவியாகப் பேணிக் காத்த இவள் தந்தைதான் நெடிது வாழ்வானாக! கொண்ட 'இவளைத் தன் மகளாகப் பெற்றெடுத்த தாயும் திண்ணிய தேரையுடையவனான பொறையனது அகற்சி வயற்புறங்களிலே, நெல்லரிவோரால் அரியப் பட்டும், அதனைக் கட்டிக் கொணர்ந்து போரிடத்தே தருவோரால் தரப்பட்டும், அதனால் தண்ணிய பரந்ததாகி, அழகுடைய வலிய தண்டினையுடையதும் கண் போலத் தோற்றுவதுமாகிய நெய்தல் மலர்கள் நெற் போரிடத்தேயே பூத்திருக்கும், அத்தகைய தொண்டிப் பட்டினத்துச் சிறப்பினையெல்லாம் பெற்றுச் சிறப்பெய்து வாளாக! தாம். சேறு கருத்து: இவளைப் பெற்றது பெரும்பேறு' என்ப சொற்பொருள் : உழந்த - வருத்தமுற்ற; இது கலவியாற் சிவப்புற்ற கண்களைக் கண்டு கூறியது. அல்கு படர் - மிக்க துன்பம். போர் - கதிர்ச்சூடு. மதன் - அழகு. விளக்கம் : வயலையும் அழகுபடுத்தித் தான் சேர்ந்த போரிடத்தும் அழகு செய்து திகழும் நெய் தலைப் போலவே, அவள் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் சிறப்பினைத் தருவாள் என அவன் நலனை வியந்து போற்றியதும் ஆம். மேற்கோள்: நச்சினார்க்கினியர் (தொல். பொ. 14. உரை) இதனைப் 'புணர்தல் நிமித்தம்' என்று கூறுவர். அவ் வாறு கொண்டால், 'ஆயத்துள் ஆடிமகிழும் தலைவியைக் கண்டு நெஞ்சம் தளர்ந்த தலைவன் ஒருவன், அவளைத் தனக்குக் காட்டிய ஊழையும், அவளைப் பெற்றெடுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/25&oldid=1627147" இலிருந்து மீள்விக்கப்பட்டது