உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

நற்றிணை தெளிவுரை


செவ்விய நீர்மை கொண்ட பொதுக் காரியம் வரி – ரேகை கள் உயவுதல் –உசாவுதல்.

விளக்கம் : அன்புடையராதலின் விரைந்து மீள்வர்'– எள வலியுறுத்தினாளுக்கு, 'எனை விருப்புடையர் ஆயினும் இது காலை நினைவிலர்' என்று எதிருரைக்கின்றனள். "நினைவினராயின் ஒரு நாட்கூட, எவன் செய்தனள்; இப் பேரஞர் உறுவி" எனக் கூறின்று மிலரே" எனத் தன்னைப் பற்றி அறிந்து வருவதற்குத் தூதேனும் விடுக்காமையைக் காட்டிப் புலம்புகின்றனள், 'பிறிது உயவுத்துணை இன்று' என்றது, தோழிதான் தூதுரைத்து விரையத் திரும்புமாறு அவரைத் தூண்டினாளும் அல்லள்' என்ற மனக்குறையைக் காட்டுமுகத்தான் ஆம்.

'செந்நீர்ப் பொதுவினைச் செம்மல்' என்றது, தலைவன் பொதுவினையாகிய நாட்டின் காவலைக் கருதிச் செல்லும் தலைமைப்பாட்டினை உடையவன்' என்பதனால், அதன்கண் செந்நீர்மை கொண்டொழுகுவான் தன்னளவில் அதனைக் கைவிட்டதுதான் எதனால என்பாள், தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ?!' என்கின்றனள்.

131. ஊடல் உடையமோ?

பாடியவர் : உலோச்சனார்.
திணை : நெய்தல்.
துறை : மணமனையிற் பிற்றைஞான்று புக்க தோழியைத் தலைவன், 'வேறுபடாமை ஆற்றுவித்தாய்; பெரியை காண்' என்றாற்குத் தோழி சொல்லியது சிறப்பு. பெரியனுக்குரிய பொறையாற்றுப் பட்டினத்தின் சிறப்பு.

[(து–வி) மணம் பெற்றதன் பிற்றை நாளில், 'இதுகாறும் தலைவியை நீதான் நங்கு ஆற்றுவித்துக் காத்து தந்தாய்; நீ மிகவும் பெருந்தகைமை உடையை' எனத் தலைவன் தோழியைப் பாராட்டுகின்றான். அவனுக்குத் தலைவியின் அளப்பரிய காதன்மையை உரைத்து, அதுதான் அதனாலேயே இயல்வதாயிற்று என்கின்றாள் தோழி]

ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும்
உள்ளல் ஆகா உயவுநெஞ்சமொடு
ஊடலும் உடையமோ உயர்மணற் சேர்ப்பர்!
திரைமுதிர் அரைய தடந்தாட் தாழைச்
சுறவுமருப்பு அன்ன முட்தோடு ஒசிய 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/255&oldid=1692342" இலிருந்து மீள்விக்கப்பட்டது