உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

நற்றிணை தெளிவுரை


137. அறியது எய்தினை போலும்!

பாடியவர் : பெருங் கண்ணனார்.
திணை : பாலை,
துறை : தலைவன் செலவு அழுங்கியது.

[(து–வி.) வினைவயிற் செல்லுமாறு தூண்டிய தன் நெஞ்சிற்குத் தலைவன் தலைவியது அருமை கூறியவனாக அறிவு தெருட்டித் தன் செலவை நிறுத்துகின்ற முறையில் அமைந்த செய்யுள் இது.]

தண்ணிய கமழும் தாழிருங் கூந்தல்,
தடமென் பணைத்தோள்; மடநல் லோள்வயின்
பிரியச் சூழ்ந்தனை ஆயின், அரியது ஒன்று
எய்நினை வாழிய நெஞ்சே! செவ்வரை
அருவி ஆன்ற நீர்இல் நீள் இடை, 5
கயந்தலை மடப்பிடி இயங்குபசி களைஇயர்,
பெருங்களிறு தொலைத்த முடத்தாள் ஓமை
அருஞ்சுரம் செல்வோர்க்கு அல்குநிழல் ஆகும்
குன்ற வைப்பின் கானம்
சென்றுசேண் அகறல் வல்லிய நீயே! 10


நெஞ்சமே! செவ்விதான மலையிடத்திருந்து வீழும் அருவியிடத்துப் பொருந்திய நீர் இல்லாதே போயிருக்கும் தன்மையுற்ற நெடிதான நெறி; அந்நெறியிடத்தே, மென் தலையினை உடைய தன் இளம்பிடி வருத்தமுறுகின்ற பசி நோயினைப் போக்கும் பொருட்டாகப் பெரிய களிற்று யானையானது, வளைந்த அடியைக் கொண்ட ஓமை மரத்தை முறித்துத் தள்ளியிருக்கும். அத் தன்மை கொண்ட செல்லற்கரிய சுரநெறியிடத்தே, அவ்வோமை மரங்களே செல்வார்க்குத் தங்கும் நிழலாகவும் விளங்கும். இடையிடையே குன்றுகளைக் கொண்ட அத்ததைய காட்டுவழியாகச் சென்று, நெடுந்தொலைவுக்கு அகன்று போதற்கும் நீதான் வலிமையுற்றனை. அத்தகைய நீதான், தண்மணம் கமழ்கின்றதும், பிடரியிடத்துத் தாழ்ந்து கிடப்பதுமான கருகூந்தலையுடையாளும், பருத்த மென்மை கொண்ட தோள்களையும் இளமைப் பருவத்தையும் உடையாளுமான நம் தலைவியைப் பிரிதற்கும் கருதினை. அஃது உண்மையாயின், அவளிலுங் காட்டில் எமக்குப் பெறுதற்கு அரிதான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/265&oldid=1692767" இலிருந்து மீள்விக்கப்பட்டது