உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

283


தலைவன் மடலேறி வருகின்ற மரபினை,
'மாவென மடலும் ஊர்ப: பூவெனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியுஞ் சூடுப;
மறுகின் ஆர்க்கவும் படுப;
பிறிதும் ஆகுப; காமம் காழ்க்கொளினே'

எனவரும் குறுந்தொகைப் பாட்டானும் அறியலாம்.(குறுந்: 17).

147. எவ்வண்ணம் உய்வேம்?

பாடியவர் : கொள்ளம் பக்கனார்.
திணை : குறிஞ்சி.
துறை : சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.

[(து–வி.) தலைவன் தலைவியை ஊரறிய மணந்து கொள்ளுதலைத் தூண்டுதற்கு நினைந்த தோழி இவ்வாறு தலைவிக்குக் கூறுவாள்போல அவனும் கேட்டு உணருமாறு கூறுகின்றனள்.]

யாங்குஆ குவமோ அணிநுதற் குறுமகள்!
'தேம்படு சாரற் சிறுதினைப் பெருங்குரல்
செவ்வாய்ப் பைங்கிளி கவரநீ மற்று
எவ்வாய்ச் சென்றனை அவண்?' எனக் கூறி,
அன்னை ஆனாள் கழற முன்னின்று 5
'அருவி ஆர்க்கும் பெருவரை நாடனை
அறியலும் அறியேன்; காண்டலும் இலனே
வெதிர்புனை தட்டையேன் மலர்பூக் கொய்து
சுனைபாய்ந்து ஆடிற்றும் இலன்' என நினைவிலை
பொய்யல் அந்தோ! வாய்த்தனை? அதுகேட்டுத் 10
தலைஇறைஞ் சினளே அன்னை;
செலவுஒழிந் தனையால், அளியை நீ, புனத்தே?

அழகான நெற்றியைக் கொண்ட இளமகளே! 'தேன் மணம் பரவுகின்ற மலைச்சாரலிடத்தே பொருந்திய சிறுதினைப் பயிரிடத்துப் பெருங்கதிரினைச், சிவந்த வாயினவான பசிய கிளிகள் கவர்ந்து போகவும். நீதான் மற்று அங்கே எவ்விடத்துக்குச் சென்றனையோ?' என்று, மனம் அமையாளாகிய அன்னை கேட்டனள், கேட்டலும், நீதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/284&oldid=1693892" இலிருந்து மீள்விக்கப்பட்டது