உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

285


மேற்கோள் : ஆசிரியர் இளம்பூரணனார், 'களவு அறிவுறினும்' என்னும் துறைக்கு மேற்கோளாகத் தலைவி கூற்றாகக் கொள்வர். அப்போது, தோழியால் களவு வெளிப்பட்டமை கூறித் தலைவி சொல்வதாகக் கொள்ளல் வேண்டும்.

148. வருந்தமாட்டேன்

பாடியவர் : கள்ளம்பாளனார்: கருவூர்க் கண்ணம் பாளனார் எனவும் பாடம்.
திணை : பாலை.
துறை : பிரிவுணர்ந்து வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறீஇயது.

[(து–வி.) 'தன்னைப் பிரிந்து வேற்றூர்க்குத் தலைவன் செல்ல நினைக்கின்றான்' என்பதனை, உய்த்துணர்ந்தாள் ஒரு தலைவி. அவள் மேனி நாளுக்குநாள் நலியத் தொடங்கிற்று. தலைவியது தளர்வைத் தோழி காணுகின்றாள். அவள் மனத்தைத் தெளிவிக்கத் தோழி உரைப்பதாக அமைந்த செய்யுள் இது.]

வண்ணம் நோக்கியும் மென்மொழி கூறியும்
'நீஅவண் வருதல் ஆற்றாய்' எனத்தாம்
தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர் இன்றே
நெடுங்கயம் புரிந்த நீர்இல் நீள் இடைச்
செங்கால் மராஅத்து அம்புடைப் பொருந்தி 5
வாங்குசிலை மறவர் வீங்குநிலை அஞ்சாது
கல்லளைச் செறிந்த வள்ளுகிர்ப் பிணவின்
இன்புனிற்று இடும்பை தீரச் சினம்சிறந்து.
செங்கண் இரும்புலிக் கோள்வல் ஏற்றை
உயர்மருப்பு ஒருத்தல் புகர்முகம் பாயும் 10
அருஞ்சுரம் இறப்ப என்ப
வருந்தேன் தோழி! வாய்க்க அவர் செலவே!

தோழி! என் மேனி வண்ணத்தினது சிறப்பினைப் பல படியாகப் பார்த்துப்பார்த்து இன்பமடைந்தனர்; மென்மையான சொற்கள் பலவற்றைப் பேசி என்னை மகிழ்வித்தனர்; நீதான் அவ்விடத்திற்கு எம்முடனே கூடியபடி வருதலை ஆற்றமாட்டாய் என்பார். தாம் தொடங்கிச் செய்யும் முயற்சியினை மேற்கொண்டவராய் நம்மைப் பிரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/286&oldid=1693894" இலிருந்து மீள்விக்கப்பட்டது