உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

343


178. கண் படை பெறேஎன்!

பாடியவர் :......
திணை : நெய்தல்.
துறை : சிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறீஇயது.

[(து–வி.) வரைந்து வந்து மணந்துகொள்ளுதலிலே மனமானது பற்றாதாளாய்த் தலைவியைக் களவிலே துய்த்து இன்புறுதலையே விரும்பி வந்தொழுகும் தவைவனுக்கு, வரைவொடு வருதலைத் தாம் விரும்பியதனை அறிவிக்க நினைக்கின்றாள் தோழி. 'அன்னை களவுறவைக் கண்டாளாதலின் தலைவி இனி இச்செறிக்கப்படுவாள்' என உரைப்பதன் மூலமாக, இரவுக்குறியை மறுத்துக்கூறி விரைய வரைந்து வருவதற்குத் தூண்டுகின்றாள்.]

ஆடமை ஆக்கம் ஐதுபிசைந் தன்ன
தோடமை தூவித் தடந்தாள் நாரை
நலன் உணப் பட்ட நல்கூர் பேடை
கழிபெயர் மருங்கில் சிறுமீன் உண்ணாது
கைதைஅம் படுசினைப் புலம்பொடு வதியும் 5
தண்ணம் துறைவன் தேரே கண்ணின்
காணவும் இயைந்தன்று மன்னே; நாணி
நள்ளென் யாமத்தும் கண்படை பெறேஎன்
புள்ளொலி மணிசெத்து ஓர்ப்ப
விளிந்தன்று மாதுஅவர்த் தெளிந்தஎன் நெஞ்சே. 10

அசையுந் தன்மைகொண்ட மூங்கிலை மெல்லிதாக உரித்துப் பிசைந்து வைத்தாற்போன்ற தொகுதியமைந்த சிறகுகளையும், நெடிய கால்களையும் உடையது நாரை; அதனாலே நலனுண்ணப் பெற்றுக் கைவிடப்பட்ட வருத்தத்தினாலே சோர்வுற்றது நாரைப்பேடை ஒன்று. கழியிடத்துத் தான் பெயரும் இடங்களிலே எதிர்ப்பட்ட சிறுமீன்களை உண்ணலையும் விடுத்தது; தாழையது அழகியதாய் வளைந்து தோன்றும் கிளையிடத்தே சென்றமர்ந்து வருத்தத்தோடும் தங்கியிருந்தது. நாரைப் பேடையும் தன் காதலனைப் பிரிந்த வருத்தத்திற்கு வாடியிருக்கும் தண்ணிய கடற்றுறைவன் நம் காதலன். எனினும், அவனுடைய தேரினைக் கண்ணாற் காணவும் இயலுவதன்றாயிற்று; யானே என் துயரத்தை வெளியே காட்டுதற்கும் நாணினவளாக, நள்ளென்னும் ஒலியையுடைய இரவின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/344&oldid=1731821" இலிருந்து மீள்விக்கப்பட்டது