உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

402

நற்றிணை தெளிவுரை


கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் 144

கச்சிப்பேடு என்பது காஞ்சிபுரத்தைச் சார்ந்த ஒரு சிற்றூராகும். அவ்வூர்த் தச்சர் குலத்தவராக இவரும், இவரினும் இளமைப் பருவத்தினரான இளந்தச்சனாரும் குறிக்கப் பெற்றுள்ளனர். இச் செய்யுளும் நற்றிணை 213 ஆவது செய்யுளும் இவர் பெயரால் வழங்குவன. 'காஞ்சிக் கொற்றனார்' என்பாரும், கச்சிப்பேட்டு நன்னாகையாரும் இவ்வூரினராவர். இச் செய்யுளுள், 'வரும் வழியது ஏதத்திற்கு அஞ்ரிய தலைவியானவள், இரவுக்குறியிடத்து வந்தோனாக ஒருசிறை நிற்கும் தலைவன் கேட்குமாறு சொல்லுகின்றாளாக' இவர் நயம்படப் பாடியுள்ளனர். பெருந்தச்சு என்பது பெருமனைகளும் பெருங்கோயில்களும் எழிலுற அமைக்கும் தொழில்நுட்பத் தகுதியாகும்.

கடுவன் இளமள்ளனார் 151

மதுரைத் தமிழக்கூத்தன் கடுவன் இளமள்ளனார் என்பாரும் இவரும் ஒருவரே யெனவும். இருவரும் வேறானவர் எனவும் உரைக்கின்றனர் பாண்டியன் மாறன் வழுதியது போராற்றலை இச் செய்யுளுள் இவர் குறிப்பிட்டுள்ளனர். மள்ளராகவும், கூத்தராகவும் தமிழ்ப் புலவராகவும் விளங்கியவர். 'ஒருமைய நெஞ்சங் கொண்டமை விடுமோ?' எனக் கேட்பதாக உரைக்கும் திறம் வியத்தற்கு உரியதாகும்.

கண்ணகனார் 79

கண்ணனாகனார் என்பது 'கண்ணகனார்' எனத் திரிந்தது; இவரியற்பெயர் 'நாகனார்' என்பதாகும். கோப்பெருஞ் சோழனின் காலத்தவர். புறநானூற்று 218ஆம் செய்யுளால் பிரோந்தையாரின் நட்பு மேம்பாட்டைப் பெரிதும் வியந்து பாடியவர். பிரிவுணர்ந்து வேறுபட்ட தலைமகள் தோழிக்குத் தன் நிலையைச் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.

கண்ணகாரன் கொற்றனார் 143

இவர் பெயர் கொற்றனார் என்பதாகும் 'கண்ணகாரன்' என்னும் அடைமொழி இவரது ஊரையாயினும் தொழிலையாயினும் குறித்து அமைந்ததெனக் கருதலாம். மனை மருட்சியாக இவர் பாடியுள்ள இச் செய்யுள் தாய்மையின் பெரும்பாசத்கை நன்கு காட்டுவதாகும். தன் மகள் தான் விரும்புங் காதலனுடன் உடன்போக்கில் சென்றாளாயினும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/403&oldid=1711060" இலிருந்து மீள்விக்கப்பட்டது