உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

406

நற்றிணை தெளிவுரை


பார்த்திருக்கும் மனையோளைப்பற்றி உரைக்கும் இச் செவ்வியையும் இச் செய்யுட்களாற் கற்று இன்புறலாம்.

குன்றியனார் 117

குன்றையொட்டிய ஊரவராதலின் இப் பெயரினைப் பெற்றவராதலும் பொருந்துவதாம். இவர் பாடியன அகநானூற்றுள் மூன்றும் குறுந்தொகையுள் ஐந்தும், நற்றிணையுள் இரண்டுமாக மொத்தம் பத்துச் செய்யுட்கள் ஆகும். மாலைப் பொழுதினது வருகையை இப் பாடலுள் இவர் மிகவும் அழகாக எடுத்துரைக்கின்றனர்.

கூடலூர்ப் பல்கண்ணனார் 200

இவர் கூடலூரினராதல் இவர் பெயரால் விளங்கும். 'பல்கண்ணன்' என்றது இவரது தொழிலையொட்டி வந்த பெயராகவும் கொள்ளப்படுவதுண்டு. பண்டை நாளிலே ஊர் விழாவைக் குயவர், பலருக்கும் சென்று அறிவிக்கும் வழக்கத்தை உடையவர் என்பது இச் செய்யுளாற் காணப்படும் உண்மையாகும்.

கொள்ளம் பாக்கனார் 147

'கொள்ளம் பாக்கம்' என்னும் ஊரினராதல்பற்றி இப் பெயருடையராயினர் போலும். இவரது செய்யுளாகக் காணப்படுவது இஃது ஒன்றே. குறிஞ்சித்திணைச் செய்யுள் இதுவாகும். தலைவியின் களவுறவை அன்னையும் அறிந்தனளாதலின் இனி யாது செய்வேமோ எனக் கவலையுற்றுத் தோழி கூறுவதாக அமைந்துள்ள இச் செய்யுள் மிக்க சுவையுடையதாகும். 'எவ்விடஞ் சென்றனை?' எனக் கேட்டாளான தாய்க்குப் பெருவரை நாடனை அறியலும் அறியேன்; காண்டலு மிலேனே' எனப் பொய்யுரைப்பாள் போன்று உண்மையை உரைத்துவிட்ட தலைவியது சால்பினையும் இச்செய்யுளாற் காணலாம்.

கொற்றனார் 31

கொற்றங் கொற்றனாரினும் வேறானவர் இவர். இவரைச் செல்லூர் கிழார் மகனார் பெருங்கொற்றனார் எனவும், செல்லூர்க் கொற்றனார் எனவும் உரைப்பர். செல்லூர் இந்நாளைய இராமநாதபுர மாட்டத்து உளதாய ஓரூராகும். பரசுராமர் வேள்வி இயற்றியதாகக் குறிக்கப்பட்டுள்ள ஊரும் இதுவாகும். கொற்றம் வெற்றியைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/407&oldid=1711064" இலிருந்து மீள்விக்கப்பட்டது