உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடிய சான்றோர்கள்

421


பெருந்தேவனார் 83

பாரதம் பாடிய பெருந்தேவனாரினும் வேறாய ஒருவர் இவர் என்பர். அகநானூற்று 51ஆம் செய்யுளும், குறுந்தொகை 255ஆம் செய்யுளும், இச்செய்யுளும் இவர் பெயரால் வழங்குவன. பிரிந்துறையும் தலைவி நள்ளிரவினும் துயில்கொள்ள இயலாளாய் நலிந்திருக்கின்றனள். அவ்வேளை கூகையின் கடுங்குரல் எழ, அவள் அதனைக்கேட்டுப் பெரிதும் மனம் நடுங்குகின்றனள்; அக்கூகையிடத்துக் கடுங்குரல் பயிற்றாதிருக்குமாறு தோழி கேட்பதாக அமைந்த செய்யுள் இதுவாகும். தலைவியின் மனநிலையைத் தலைவனுக்கு உணர்த்தி வரைவுகடாதற் பொருட்டுப் புனைந்து கூறியதாகவும் இதனைக் கருதலாம்.

பெரும்பதுமனார் 2, 109

இவரும் மீளிப் பெரும்பதுமனார் என்பாரும் வேறாயவர் ஆவர். இவர் பாடியவை குறுந்தொகையின் 7ஆம் செய்யுளும், நற்றிணையின் 2, 109 ஆம் செய்யுட்களும், புறநானூற்றின் 199ஆம் செய்யுளும் ஆகும். பாலைத்திணைச் செய்யுட்களைச் செய்தில் வல்லவர் இவராவதை இச்செய்யுட்களால் நாம் அறியலாம். கொடையாளியிடம் இரவலர் மீண்டும் மீண்டும் சென்று இரந்து பெற்று வருவதனைப் பழமரத்தை நாடி நாள்தோறும் புள்ளினம் செல்வதனோடு ஒப்பிட்டுள்ளவர் இவர் (புறம்.189). இடைச்சுரத்துக் கண்டார் கூற்றாக அமைந்த குறுந்தொகைச் செய்யுள் மிகவும் நுட்பமுடைத்தாகும். தலைவியின் மென்மையைக் கண்டு அவளைச் சுரத்தூடே அழைத்தேகும் தலைவனின் உள்ளம் இடியினுங் காட்டிற் கொடிதெனக் கண்டார் சொல்வதாக அமைந்த செய்யுளும் (2), பிரிவிடை ஆற்றாளான தலைமகளது. நிலைக்குத் துளியுடைத் தொழுவில் துணிதல் அற்றத்து உச்சிக்கட்டிய கூழை ஆவின் நிலையை உவமித்த திறமும் (109) இவரது புலனைத்திறனை விளக்குவனவாகும்.

பெருவழுதி 55, 56

கடலுண் மாய்ந்த இளம்பெருவழுதியும் இவரேயாவர், 'புலவரை அறியாப் புகழொடு பொலிந்து' எனத்தொடங்கும் பரிபாடற் செய்யுளை இயற்றியவரும் இவரே. ஐயுற்றுக் கேட்ட தாய்க்குத் தோழி மற்றொன்றைக் காட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/422&oldid=1731079" இலிருந்து மீள்விக்கப்பட்டது