உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

நற்றிணை தெளிவுரை


கண்ணுறங்குமாறு. மதன் ஒழிந்ததாய்ச் சினமடங்குதலைப் பெற்றது, பாசறையைக் கலக்கிய மதங்கொண்ட போர்க் களிறு. பிறரால் தடுத்தற்கு அரிதான மறத்தன்மையை உடைய அதனது ஒற்றைக் கொம்பைப்போல, ஒன்றாக விளங்கிய அருவியை உடைய குன்றத்தைக் கடந்து சென்றோர் தம் தலைவர். அவரும், வருத்தங்கொண்ட நெஞ்சத்தோடு நீ கொண்ட பலவாகிய துன்பமும் அகன்று போகுமாறு, நின்பால் விரைந்து வருவர். கருத்து 'அதுகாறும் நின் சுவலையை ஆற்றியவளாக நீயும் கண்ணுறக்கம் கொள்வாயாக' என்பதாம். சொற்பொருள் : பருவரல் - வருத்தம். படர் - பிரிவுத் துன்பம். 'மூவன்' ஒரு குறுநில வேந்தன். பொருநன்- தலைவன். பொறையன் - இரும்பொறை மரபினனாகிய சேரமான் கணைக்கால் இரும்பொறை. திரைதபு கடல்- அலையோய்ந்த கடல். கடா அம் - மதம். விளக்கம்: தோற்றாரது பற்களைப் பறித்துவந்து தம் கோட்டைக் கதவுகளிலே பதித்துவைத்த வெற்றியைக் கொண்டாடுதல் பண்டைய தமிழர் மரபாதலைச் இச் செய்யுள் காட்டுகின்றது. யானை ஒரு கோட்டினை உடைய தானது போர்க்களத்திலே அதனது மற்றைய கோட்டினை இழந்ததனாலும் ஆகலாம். அதனால் மதங்கொண்டு, அது பாசறையை இரவெல்லாம் கலக்கிப் பின்னரே ஓய்ந்தது என்க. உள்ளுறை: மறவர் இனிது கண்படுப்பத் தன் மதத் தைக் கழுவிய யானையைப்போல, நீயும் இனிது கண்படுப்ப. நின் பல்படர் அகல, நின் தலைவரும் விரைந்து வந்து நினக்கு அருளிச்செய்வர்' என்பதாம். பிற பாடம்: தடாஅ நிலை ஒருகோடு' என்பது, 'தடவு நிலை ஒருகோடு' எனவும் வழங்கும். 19. அறிந்தனையாய்ச் செல்க! [(து-வி) பகற்குறியிலே தலைவியைக் கூடியின்புற்ற பின்னர் அவ்விடம்விட்டு அகன்ற தலைவனைத் தோழி சந்தித்துத், தலைவியை விரைவிலே வரைந்து கொள்ளு தலைக் கருதுமாறு, இவ்வாறு உரைக்கின் றனள் ] இறவுப்புறத்து அன்ன பிணர்படு தடவுமுதல் சுறவுக்கோட்டன்ன முள்ளிலைத் தாழை பெருங்களிற்று மருப்பி னன்ன அரும்புமுதிர்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/43&oldid=1627165" இலிருந்து மீள்விக்கப்பட்டது