உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 49 கருத்து: 'நீயும் இனி இன்பவாழ்வில் திளைப்பாயாக என்பதாம். அணல். சொற்பொருள்: ஞிெமிடி-கயக்கி: நிமிண்டி. தாடி,கவுள்-மோவாய் முக்கி-நிறையத் தின்று. நோன்பியர்- நோன்பு பூண்டோர்; விரத யாக்கையர். இவர் தம் கையிடத்து இடப்பெறும் பிச்சையினை மட்டுமே உண்டு, தம் நினைவை ஆன்ம உயர்ச்சியின்கண் செலுத்தியிருப்போர். விளக்கம் : முந்துவிளை பெருங்குரல்' என்றதால், 'தினை விளைந்து முற்றிய பின்னர் வதுவை கூடும் காலம் வரும்' என்று கூறினாளாம். 'வான் பெயல் நனைந்த புறத்த' என்றதனால், குறித்த கார்காலத்தின் வரவும் வந்தது என்றனள். உள்ளுறை: மந்தி கடுவனோடு நல்வரை ஏறித் னைக் கதிரைத் தின்றபடி இன்புற்றிருக்கும் நாடன்' என்றனள். அவ்வாறே அவனோடு வதுவைபெற்றுச் சென்று இல்லறமாற்றி இன்பத்திலே திளைப்பாள் தலைவியும் என்கின்றனளாம். கயம் கண் அற்ற பைதறுகாலைப் பீளொடு திரங்கிய நெல்லிற்கு நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கு, அவனைப் பிரிதலாலே மெலிவுற்ற நின் வாட்டமனைத்தும் தீருமாறு, அவனும் வந்து அருளினான்" என்பதாம். மேற்கோள்: இதனை மேற்கோள் காட்டும் நச்சினார்க் கினியர், இதனுள் தினைவிளைகாலம் வதுவைக் கால் மாயினும் வம்ப மாரி இடையிடுதலன்றித் தான் கூறிய வரைவு பொய்த்தனரேனும், இன்று மெய்யாகவே வந்தனர் என்றாள்' எனக் கூறுவர் (தொல். பொருள். சூ. 114 உரை). வேறு பாடம்: 'கைபூண் இருக்கையின்' என்பது பாட மாயின் குளிரால் நடுங்கிய மந்தி தன் கைகளைப் பிணைத்த படிகால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த நிலை; இது நோன்பியர் இருக்கும் நிலைபோல்வ தென்க. 'தையூண் இருக்கையின்' என்பதும் பாடம். 23. கரப்பு அரிய ! பாடியவர்: கணக்காயனார். திணை : குறிஞ்சி. துறை: தலைவி துயர் ஆற்றாமை உணர்ந்த தோழி வரைவு கடாயது. ((து -வி.) தலைமகன் விரைய வந்து வரைந்து தன்னை மணந்து கொள்வான் என்று எதிர்பார்த்தாள் தலைவி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/50&oldid=1626547" இலிருந்து மீள்விக்கப்பட்டது