உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

51

கடி- காவல். செப்பு - செம்மை தெண் நீர் - தெளிந்த நீர்மை: செப்பம்.

விளக்கம்: 'தோள் உய்ந்தன' வென்றது, 'பிறர் கூறும் பழிச்சொற்களினின்று' என்று கொள்க. மேனியின் மெலிவு உண்மையாயினும், அது தோழியரோடு விளையாட்டயர் தலினாலே உண்டாயிற்றெனப் பிறர் கருதிப் பழித்தலிலர் ஆயினர். 'இவற்றை அறிந்த தலைவி கண்கலங்கியவளாகத் துயருற்று நலிகின்றனள்: அதனை மறைத்தல் இனி அரிது’ என்பதாம். ஆகவே 'இனிக் களவும் வெளிப்படும்; அலருரையும் பெருகும்; அதனைப் போக்குதற்கு, அவனை மணந்து இன்புறுத்துதலை நீயும் விரைய மேற்கொள்வா யாக' என்பதாம். 'ஈண்டுநீர் முத்துப்படு பரப்பின் கொற்கை' என்றது, நும்மிருவரது வதுவையினாலே இவளது தமரும் இவ்வூரும் பெரிதும் சிறப்படையும் என்பதாம்.

24. நன்று செய்தனை!

பாடியவர் : கணக்காயனார். திணை : பாலை. துறை: பொருட்பிரிவுக்கு உடன்பட்ட தோழியைத் தலைவி உவந்து கூறியது.

( (து - வி.) பொருளைத் தேடி வருதலைக் கருதித் தலைவியைப் பிரிந்து வேற்று நாட்டிற்குச் செல்லற்கு முற்படுகின்றான் தலைவன்.' அதனால், தலைவி கொள்ளும் துயரமிகுதியைத் தோழி அறியாளல்லள். என்றாலும். தலைவன் செல்லுதலே ஆண்மைக் கடனாமாறும் அறிந்தவ ளாதலின், அவன் போவதனை ஏற்று, அதற்குத் தானும் உடன்படுகின்றாள். அதனை அறிந்த தலைவி, தன் தோழி யிடத்தே, தன் கற்புச் செவ்வி தோன்ற உவப்புடன் இவ்வாறு கூறுகின்றாள்.]

'பார்பக வீழ்ந்த வேருடை விழுக்கோட்டு உடும்படைந் தன்ன நெடும்பொரி விளவின் ஆட்டு ஒழி பந்தின் கோட்டுமூக்கு இறுபு கம்பலத் தன்ன பைம்பயிர்த் தாஅம் வெள்ளில் வல்சி வேற்றுநாட்டு ஆர்இடைச் சேறும், நாம்'எனச் சொல்லச் சேயிழை! 'நன்று' எனப் புரிந்தோய் நன்றுசெய் தனையே! செயல்படு மனத்தர் செய்பொருட்கு

அகல்வர் ஆடவர்; அது அதன் பண்பே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/52&oldid=1626601" இலிருந்து மீள்விக்கப்பட்டது