உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

நற்றிணை தெளிவுரை

சொற்பொருள்: செவ்வி - செம்மண் பூச்சால் உண்டாகும் செந்நிறம்; அழகும் ஆம்; பிண்ட நெல் - நிறைந்த நெல். கெடுதுணை - கெடுதற்காலத்தும் உறுதுணையாக விளங்கும் சிறந்த துணை.

விளக்கம் : "பிண்ட நெல்லின் தாய் மனை" என்று தாய் வீட்டின் வளமான நிலையை உரைத்தனள். அதனை நீத்து நின்பாலுள்ள காதலினாலே, நினக்குக் கெடுதுணையாகி யவள்; நின்னை நம்பியவளாக அத்தம் கடந்துவந்தவள்: அவளது செயலின் தவறோ இப்போது வளை நெகிழ்ந்தன?" எனக் கேட்கின்றாள். 'நின் பிரிவை நினைந்து அவள் மேனி தளர்ந்தது; அது குறித்து நீ வருந்தினாயில்லை; யானே நோகின்றேன் என்றாளும் ஆம்.

27. என்ன நினைத்தாளோ!

பாடியவர் : குடவாயிற் கீரத்தனார். திணை : நெய்தல். துறை : சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.

( (து-வி.) பகற்குறியிடத்தே தலைவிக்குத் துணையாக வந்து அவளுடனிருக்கும் தோழி, தலைவன் வந்து செவ்வி நோக்கி ஒருசார் நிற்பதறிந்து, தலைவிக்குக் கூறுவாள்போல, அவன் கேட்டுணருமாறு இப்படிக் கின்றாள்.]

நீயும் யானும், நெருநல், பூவின்

நுண்தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி

ஒழிதிரை வரித்த வெண்மணல் அடைகரைக்

கழிசூழ் கானல் ஆடியது அன்றிக்

கரந்துநாம் செய்ததுஒன்று இல்லை; உண்டுஎனின், பரந்துபிறர் அறிந்தன்றும் இலரே-நன்றும்

எவன் குறித் தனள்கொல் அன்னை? கயந்தோறு இறஆர் இனக்குருகு ஒலிப்பச் சுறவம்

கழிசேர் மருங்கின் கணைக்கால் நீடிக் கண்போல் பூத்தமை கண்டு, 'நுண்பல சிறுபா சடைய நெய்தல்

குறுமோ, சென்று' எனக் கூறா தோளே.

5

10

10

தோழி! நேற்றைப் பொழுதிலே நியும் நானுமாகப் பூக்களிடத்தே படிந்து நுண்ணிய தாதிலே திளைக்கும் வண்டினங்களை ஓட்டியபடியே, ஒழிந்த அலைகள் குவித்த வெள்ளிய மணலினையடுத்த கரைப்பக்கத்தே, கழி சூழ்ந்துள்ள கானற் சோலையிடத்தே விளையாட்டயர்ந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/57&oldid=1626606" இலிருந்து மீள்விக்கப்பட்டது