உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

நற்றிணை தெளிவுரை


உணர்ந்து, பலவாய கால்களையுடைய நண்டானது சென்று பற்றிக்கொள்ளும். நண்டு பற்றிக் கொண்டதினின்றும் அதனை மீட்டற்கு இயலாவாய்த் தளர்ச்சியுற்ற வண்டுகள், மேலெழுந்து, அதனைச் சூழநின்று பேரொலி செய்தவாய்ப் பூசலிட்டிருக்கும். அவ் வேளையிலே, இரையைத் தேடிய ஒரு நாரையானது வரக்கண்டதும், அதற்கஞ்சிய ந ண்டு, பழத்தைக் கைவிட்டுச் சென்று ஒடிப் பதுங்கும். அதன்பின், வண்டுகளின் பூசலும் அடங்கும். அத்தகைய கடற்றுறை விளங்கும் குட்டுவனின் மாந்தை நகரத்தைப் போன்றது. இவளுடைய எழில் இத்

தன்மையதே என்பதைக் கான் முன்னரும்

விலகாதே பக்கத்தேயிருந்து நீ தலையளி செய்தாலும், இவள்து கண்கள் பசலைநோயுற்றதன் காரணம். சிறிதளவு முயக்கமானது கைநெகிழ்ந்ததனாலே உண்டாகிய அழகின் சிறப்பாகுமோ? கள்ளுண்டு மகிழந்தார்க்குக் கள் இல்லாதே போகுங் காலத்துப் பிறந்த வேறுபாட்டைப் போன்றதான காம மயக்கத்தின் வேறுபாடு தானோ? இதனை யான் அறியேனே!

கருத்து: 'நின் காதலது மிகுதியே இவளது துயரத்தை ஆற்றுவித்துக் காத்தது' என்பதாம்.

சொற்பொருள் : அசாந்து - தளர்ந்து. நரம்பு- யாழ் நரம்பு. புன்கால் - மெல்லிய காம்பு. இருங்கனி - கரிய கனி.

விளக்கம் : 'களவுக்காலத்தே ஒன்றுபட்டிருந்து நீதான் இன்புறுத்தின காலத்தும், அணைத்திருந்த நிலை சிறிது நெகிழ்ந்ததற்கே பசந்த தன்மையுடையவள் தலைவி. இத் தன்மையினை உடையவளை ஆற்றுவிப்பது நின்னையன்றிப் பிறராலே செயத்தகும் ஒரு செயலாகுமோ? கள்ளுண்டு களித் தோர் உண்டதன் பின்னரும் நெடும்பொழுதிற்கு அந்தக் கள்ளினது மயக்கத்தின் நினைவிலே திளைத்தவராக இன்புறு தல் இயல்பு. அவ்வாறே, இவளும் நின்னோடு பெற்ற இன் பத்தின் நினைவாலே, தன்னை மறந்து, நின் பிரிவை ஒரு வேளை ஆற்றியிருந்திருக்கலாம். ஆனால், இவள் கண்கள் நின்னைக் காணாவாய்ப் பசந்தன என்பதும் அதுதான் எதனாலோ?' இவ்வாறு கூறுகின்றாள் தோழி. இது தலைவனது மேம்பாடே தலைவியை ஆற்றியிருக்கும் திண்மை யளாகச் செய்து காத்தது என்று போற்றியதாம்.

உண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/73&oldid=1627195" இலிருந்து மீள்விக்கப்பட்டது