உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

81


[(து - வி.) பரத்தையுறவிலே இன்புற்றிருந்த தலைவன் ஒருவன், தனக்குப் புதல்வன் பிறந்தானா தலைக் கேட்டதும், தன் இல்லிற்குச் சென்று சேர்கின் றான். சினங்கொண்ட பரத்தை, தலைவியின் தோழியர் கேட்குமாறு, இவ்வாறு நகையாடிக் கூறுகின்றாள்.]

று

நெடுநா ஒள்மணி கடிமனை இரட்டக் குரை இலைப் போகிய விரவுமணற் பந்தர்ப் பெரும்பாண் காவல் பூண்டென, ஒருசார், திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப வெறிஉற விரிந்த அறுவை மெல்லணைப் புனிறுநாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப் பசுநெய் கூர்ந்த மென்மை யாக்கைச் சீர்கெழு மடந்தை ஈர்-இமை பொருந்த நள்ளென் கங்குல் கள்ளன் போல அகன்துறை ஊரனும் வந்தனன்- சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே.

сл

10

நெடிய

அமையுமாறு

மணஞ்

காண்

காவலையுடையதான மனையிடத்திலே நாவினைக் கொண்டதான ஒள்ளிய மணியும் ஒலித்தலைத் தொடங்கியது. ஒலிக்கும் தென்னங்கீற்றால் மிடைந்து மணல் பரப்பியிருக்கப் பெற்ற பந்தரிடத்தே, பெரும் பாணர்கள் சூழநின்று காவல் காத்திருந்தனர். திருந்திய கலனணிந்த மகளிர்கள், இவ் வேளையிலே தலைவனின் மகனைக் காத்தபடி நன்னிமித்தமாகச் சூழ்ந்து நிற்கின்றனர். நறுமணம் சேர்த்து விரிக்கப்பெற்ற விரிப்பினைக் மெல்லணையிடத்தே, ஈன்றதன் அணிமை மணம் மணக் கின்ற புதல்வனும், செவிலித் தாயோடு படுத்து உறங்கு கின்றனன். வெண் கடுகை அரைத்து அப்பி, எண்ணெய் தேய்த்து முழுகியதான நீராட்டினாலே ஈரமான அணியைக் கொண்டதாகவும், பசுவின் நெய்யினைப் பூசிக்கொண்ட மென்மையான தன்மையதாகவும் விளங்கின உடலினளான, அழகு நிரம்பிய அவன் மனைவி, தான் கருவுயிர்த்ததன் சோர்வினாலே, தன் ஈரிமைகளும் ஒன்று பொருந்த உறக்கங் கொண்டுள்ளாள். இந்நிலையிலே, நள்ளென்னும் ஒலியை உடையதான இரவின் இடையாமப் பொழுதிலே, அகன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/82&oldid=1627204" இலிருந்து மீள்விக்கப்பட்டது