உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

நற்றிணை தெளிவுரை


போக்கினீர். அவ்வேளையிலே, எம்மைப் பின்தொடர்ந்தா ராக எம் ஐயன்மார் அவ்விடத்தே வந்து சேரவும், அவர் கட்கு எதிர்நிற்கத் துணியாதே, எம்மைக் கைவிட்டு நீங்கிச் சென்றீராய், அவர்கள் பார்வையிற் படாவண்ணம் ஒளித்துங் கொண்டீர். அந்தக் காடானது அற்றை நாளைப் போன்ற நிலையதேயாகி. இற்றை நாளினும், எம் கண்ணிடத்தே இருப்பதுபோலத் தோன்றிச் சுழலா நிற்கும்!

கருத்து : நும்மையே துணையாகக் கொண்டு வந்தே மாகிய எம்பால், அருளின்றிப் பீரிதல் பொருந்தாது

என்பதாம்.

சொற்பொருள்: மறவர்-ஆறலைப்போராகிய பாலை லமாக்கள். வடி நவில் அம்பு-வடித்தல் பொருந்திய அம்பு; கூர்மையாகவும், எய்யப் பெற்றுக் கறைபடாதேயும் விளங்கும் அம்பு.

விளக்கம் : தலைவியைப் பிரியக் கருதிய தலைவனுக்கு, முன்னர்த் தன் இல்லத்தாரைப் பிரிந்து உடன்போக்கிலே வந்த தலைவியது பேரன்புத் திறத்தையும். அதுகாலை நேரிட்ட மறக்கமுடியாததொரு நிகழ்ச்சியையும், இப்படி எடுத்துக் கூறுகிறாள் தோழி மறவரை அஞ்சாது எதிரிட்டு வென்று போக்கி, எம்மவர் வரவும் ஒளித்தீர்' என்றது, 'எம்மவருக்குத் துன்பமிழைப்பின் எம்முள்ளம் நோதல் கூடுமென்ற அருளினாலே, அன்று நும்மை எளியராசுக் காட்டிக் கொண்டீர்' என்பதாம். இதனால், 'நும் ஆண்மைக்கு இழுக்கெனக் கருதாது, தலைவியின் நலத்தையே கருதினவரான தகுதி படைத்திருந்த நீர் தாமோ, இன்று இவளுக்கு அழிவைத் தருவதான இச் செயலைத் து ணிந்தீர்' என வினவியதும் ஆம். எமரையும் பிரிந்தோம்; உறுதுணையெனக் கொண்ட நீரும் பிரிந்துபோயின், என்னாவளோ? எனக் கலங்குகின்றாள் தோழி. 'காடு வளம் பெற்றிருந்த காலத்தேயே வழிப்போவரைத் தாக்கும் மறவர், காடு வளங்குன்றிக் கிடக்கும் கோடைக்காலத்தே தாக்குதலைத் தவிர்வரோ? ஆதலின், அதுகாலை நமக்கு ஏதம் வருமோவென யாம் அஞ்சமாட்டேமோ?' என்றதாம் 'ஒளித்த காடு கண்ணுள் போல இன்றும் சுழலும்' என்றது, 'நுமக்கு அவ்விடத்தே எம் நினைவு கிளர்ந்தெழ நீர் வினை பாலும் செல்லா மனத்தீராய்த், தலைவியின் நினைவாலே இடையில் திரும்புதலை மேற்கொண்டு, அதனால் பழியையும் பெறுவீர்' என்றதுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/99&oldid=1627221" இலிருந்து மீள்விக்கப்பட்டது