பக்கம்:நலமே நமது பலம்.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


132 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

அல்லது அவர் மயக்கமடைந்து விட்டார் என்றால் அது கடுமையான மாரடைப்பு என்றே கருதிட வேண்டும்.

6. மிதமான மாரடைப்பு இவருக்கு ஏற்கனவே வந்திருந்தால், அவருக்கு டாக்டர் கொடுத்திருக்கும் மாத்திரைகளும் அவரிடம் இருந்தால், அதை அவருக்கு நிவாரணம் அளிப்பதற்காகத் தரலாம். ஆனால், அது சரியான மாத்திரை தானா என்பதைத் தெளிவாக அறிந்த பிறகே, மருந்தைத் தர வேண்டும். -

7. மயக்கமடைந்து விட்டவருக்கு மாத்திரைகள் கொடுப்பதற்கு முயலக்கூடாது.

கடுமையான மாரடைப்பு (Severe Heart Attack):

கடுமையான மாரடைப்பு என்றால் திடீரென்று ஏற்படுகிற கடுமையான நெஞ்சு வலி, முகத்திலே சாம்பல் கலர் போன்ற தன்மை (Gray Colour), வியர்வை வழிதல், துரிதமான அதே சமயத்தில் பலஹlனமான நாடித் துடிப்பு, வேகமான அதே சமயத்தில் பலமற்ற சுவாசம் போன்ற உடல் மாற்றங்கள் ஏற்படுவதுடன் மயக்கம் ஏற்படுவதும் உண்டு.

சில நேரங்களில் இதயத் துடிப்பு நின்று விடுவது போல சுவாசச் செயலும் நின்று போய்விடும்.

இவ்வாறு இதயத்தின் வேலை தடைபட்டு நிற்கிறபோது, உடனே செய்ய வேண்டிய தவிர்க்க முடியாத முக்கியமான காரியம் இரண்டே இரண்டுதான்.

1. இதயப் பணியை இயங்கும்படி உடனடியாகத் தொடங்க வைப்பது.