பக்கம்:நலமே நமது பலம்.pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 157

20 &lso loulb (Fainting)

சிறு மயக்கம் என்பது சுற்றுப்புறச் சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்ப இயங்குகின்ற சுய உணர்வு விழிப்பு நிலையிலிருந்து ஏற்படுகிற தற்காலிக இழப்பு நிலையாகும். சாதாரணமான விழிப்பு உணர்வு நிலையில் இருந்து விடுபட்டுப் போய்விடுகிற சிறு விபத்தாகும். -

மூளைக்குச் செய்கிற இரத்த ஓட்டம் சரியாகப் போகாமல் தற்காலிகமாகத் தடைப்படுகிறபோதுதான், இந்தச் சிறு மயக்கம் ஏற்படுகிறது. அதாவது இரத்த அழுத்தச் சக்தி குறைந்து போகிறபோதுதான் மூளைக்குச் செல்கிற இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.

சிறு மயக்கமானது, முதலில் தலை சுற்றுகிற (Giddyness) உணர்வுடன்தான் ஆரம்பம் ஆகிறது. திடீரென்று உடனே நிலை தடுமாறி மயக்கமடைந்து விடவும் செய்து விடுகிறது.

ஒரு சிறு விளக்கம்:

சிறு மயக்கம் என்பது Faiting.

uDuasih GT6TLl Unconsicouness.

பெருமயக்கம் என்பது Coma.

இவ்வாறு சிறு மயக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள் பல உள்ளன. காரணங்கள் சாதாரணமானவைதான் என்றாலும், உடல் சுகவீனமடைந்து அதனால் உடலுக்குப் பலவீனம் ஏற்படுகிற போதுதான், இப்படிச் சிறு அளவில் மயக்கம் ஏற்படுகிறது.