பக்கம்:நலமே நமது பலம்.pdf/171

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 169

வாயிலிருந்து சிக்கிக் கொண்ட பொருள் அகற்றப்பட்ட பின்னரும் சுவசத்திலே சிக்கலாக இருந்தால், செயற்கை

சுவாசமுறையைப் பின்பற்றலாம்.

நோயாளி நிற்க முடியாத நிலையில் இருந்தால், அல்லது மயக்கமுற்றிருந்தால், அவரை மல்லாந்து படுக்க வைத்து, அவரது அடிவயிற்றில் முன் பகுதியில் விளக்கியிருப்பது போலக் கைகளை வைத்து அழுத்திச் செயல்பட வேண்டும். இப்போதும் அவரது அடிவயிற்றை அழுத்தும்போது, மார்பு எலும்புகள் உடைந்து போகாத வண்ணம் எச்சரிக்கையுடன் வலி அதிகமாகாதவாறு அழுத்தவும்.

முடிந்தவரை எவ்வளவு சீக்கிரம் வைத்தியரை வரவழைக்க முடியுமோ அல்லது மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியுமோ அதையும் விரைவாகச் செய்து விடுவது நல்லதாகும்.

குழந்தைகளுக்கு மூச்சடைப்பு ஏற்படுகிறபோது:

தொண்டையில் சிக்கிக் கொண்ட பொருளை வெளியே எடுப்பதற்காகப் கை விரலை விட்டு முயற்சிக்கலாம். ஆனால் அது முடியாத காரியம் என்றால் கீழ்வரும் முறைகளைப் பின்பற்றவும்.

குழந்தையை முகம் கீழ்ப்புறம் பார்த்திருப்பதுபோலக் குப்புற வைத்திருக்கவும். உங்களது உள்ளங்கையின் அடிப்பாகத்தால் குழந்தையின் தோள்களுக்கு இடையே உள்ள பகுதியில் நான்கு தட்டு (Blows) தட்டிவிடவேண்டும். அழுத்துவதுபோல அடித்தல்.

அதிலும் எதிர்பார்த்தது அமையவில்லை என்றால், குழந்தையை மல்லாந்து படுக்க வைத்து, முகம் மேற்புறம் பார்த்திருப்பது போல் வைத்துக் கொண்டு, மார்புப் புறத்தில் நான்குமுறை தட்டித் தள்ளி அழுத்துதல் போல் (Thrust)