பக்கம்:நலமே நமது பலம்.pdf/187

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 185

அவர்கள் இளமையிலே பெறுகின்ற இந்த அறிவுரை களும் செயல்களும், செயல் பழக்க முறைகளும், பெரியவர்களாக வளர வளர வளர்ந்து கொண்டே வந்து, பொறுப்புள்ள பொதுமக்களாக, பற்று மிக்கக் குடிமக்களாக, பத்திரமாக வாழும் வாய்ப்பினை நல்கும்.

பள்ளிகளிலும், விளையாடும் இடங்களிலும், நீச்சல் களங்களிலும், ரோடுகளிலும், மற்றும் வீடுகளிலும் அவர்கள் பத்திரமாகப் பாதுகாப்புடன் வாழ்கின்ற முறைகளைக் கற்றுக் கொள்வதால், தன்னைப் பற்றிய அறிவு, அவரவர் கடமை, தன் கடமையின் பெருமை, அது நாட்டுக்குப் பயன்படும் தன்மையெல்லாம் விளங்கும்.

ஆகவேதான் இளமையில் கல் என்பதுபோல பாது காப்புக் கல்வியையும் பாடத் திட்டமாக்கி இருக்கின்றார்கள்.

உலகம் முழுதும் இந்த முயற்சி, இந்நாளில் பேரளவில் முன்னேறி வருகிறது. பெரும் பயனை நல்கி வருகிறது. ம்ாணவர்களின் அரிய ஒத்துழைப்பினைப் பெறுகிறது. இத்தகைய முயற்சியில் ஈடுபடும் நமது மாணவச் செல்வங்களும் நாட்டின் நாளைய நாயகர்களாக, தானைத் தலைவர்களாக மாறுகின்ற போழ்தில், மாபெரும் பயனை அளிக்கும். கொழிக்கும்.

5. பாதுகாப்புக் கல்வியால் பெறும் பயன்கள்:

1. பாதுகாப்புக் கல்விக்குரிய விதிமுறைகளை ஆழ்ந்த விருப்புடன் கற்றுப் பின்பற்றும்போதும், தொடர்ந்து நடக்கும் போதும், ஏற்படுகின்ற பழக்க வழக்கங்கள், நாட்டின் சட்ட திட்டங்களையும் அவ்வாறே ஏற்றுப் பின்பற்றி வாழ்கின்ற பழக்கத்தினை அளிக்கிறது.

2. தன் உரிமையைத் தெரிந்து கொண்டு, அதன்வழி தன்னைக் காத்துக் கொள்ள விரும்புவது போலவே, பிறரது