பக்கம்:நலமே நமது பலம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 195

7. நான்கைந்து பேர்களாக சைக்கிள் ஓட்டிச் செல்லும்போது, சாலை முழுவதும் தங்களுக்கே சொந்தம் என்ற நினைவில் சாலை முழுவதும் பரவலாக ஒட்டிச் செல்லக்கூடாது.

8. வேகமாக ஓடும் கார், லாரி, ஆட்டோ ரிக்ஷா போன்ற வாகனங்களை முந்திச் செல்ல முயலக்கூடாது. முந்துவதற்கு - நேரம் வந்தால், முறையான விதிகளைப் பின்பற்றித்தான் செல்ல வேண்டும். -

9. மிதிக்கும் சக்தி இருக்கும் வரையில்தான் மிதித்துப் போகலாம். வேகமாகப் போக வேண்டும் என்பதற்காக ஓடும் லாரி அல்லது காரின் பின்புறத்தைப் பிடித்துக் கொண்டே சைக்கிளில் போகக்கூடாது. -

10. எப்பொழுதும் மிதமான வேகம் தேவை. கண்ணை மூடிக்கொண்டு காட்டுத்தனமாக சைக் கிளை மிதிக்கக் கூடாது.

11. நின்று கொண்டிருக்கும் கார்களுக்கு இடையிலே சைக்கிளை ஒட்டிச் செல்லக் கூடாது.

12. ஏற்றம், இறக்கம், மேடு, பள்ளம் முதலியவை களைப் பார்த்துத்தான் சைக்கிளை ஓட்ட வேண்டும்.

13. சாலையின் குறுக்கே கடக்க வேண்டும் என்றால், நின்று கவனித்தே திரும்ப வேண்டும்.

14. திரும்ப வேண்டிய இடங்களில் திரும்பும்பொழுது, அதற்குரிய சைகையைக் காட்டித்தான் திரும்ப வேண்டும்.

15. சைக்கிளில் செயின் மூடி இல்லாமல் இருக்கும் பொழுது, கட்டியிருக்கும் வேஷடியோ அல்லது முழுக்கால் சட்டையோ சிக்கிக் கொள்ளாமல், கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/197&oldid=691011" இலிருந்து மீள்விக்கப்பட்டது