பக்கம்:நலமே நமது பலம்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


90 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

9. தண்ணிரும் தேகமும்

தேகத்திற்குத் தண்ணிர் மிகமிகத் தேவையானதாகும். உணவுச் சத்துக்களில் ஒன்று என்றும் கூறலாம்.

ஒருவரின் உடல் உடையானது ஏறத்தாழ 65 முதல் 70 சதவிகிதம் தண்ணிரால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

நன்கு வளர்ச்சி பெற்ற ஒரு மனிதருக்கு 24 மணி நேரத்திற்கு அதாவது ஒரு நாளைக்கு 2.5 லிட்டர் தண்ணிர் வேண்டும். தினம் கட்டாயம் 2.5 லிட்டர் தண்ணிர் குடித்துத்தான் ஆக வேண்டும் என்பதில்லை. ஒருவர் உண்ணுகிற உணவில் அந்த அளவுக்குத் தண்ணிர் சேர்ந்திருப்பது போலும் சாப்பிடலாம்.

தாகம் தீர எந்தத் தண்ணிரையாவது குடித்துக் கொள்ளலாம் என்று எண்ணுவதும் முயல்வதும் தவறாகும். நன்கு காய்ச்சி ஆரவைத்த குடிநீர்தான் நன்மை தரும். நலம்

பயக்கும்.

இவ்வளவு முக்கியத்துவம் நிறைந்த தண்ணிர் கிடைக்கும் வழிகளாவன: வான் தரும் மழை மூலம் கிடைப்பது. நிலத்தில் உள்ள ஆறுகளில் குளங்களில் கிடைப்பது. நிலத்தடியிலிருந்து ஊற்றாகக் கிடைப்பது. ஊற்றுநீர், ஆற்றுநீர், மழை நீர் மூன்றும் கலந்திருப்பதால்தான் கடலுக்கு முந்நீர் என்ற பெயரே ஏற்பட்டிருக்கிறது.

குடிக்க மழைநீரைப் பயன்படுத்தலாம். மழைநீர் போல தூய்மையான நீர் வேறொன்றும் இல்லை. ஆனால் தண்ணிர் பிடித்துச் சேகரிக்கும் பாத்திரமும், வைத்திருக்கும் இடமும் சுத்தமானதாக இருக்க வேண்டும்.