பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12


ஆனால், தனக்காகப் பிறரால் செய்யமுடியாத காரியங்களுக் காக மட்டும் அவன் இரண்டொரு முறை எழுந்து செல்வான். மறுபடியும் படுக்கைதான், உறக்கம்தான் ! ஒவ்வொரு நாள் இரவிலும், மருத்துவன் கப்பித்தான் அறையிலிருந்து அவனுக்குச் சாப்பாடும் கொண்டுவந்து கொடுத்துக்கொண்டிருந்தான். இவ்வாறு இருபது நாட்கள் கழிந்தன.

 கப்பல் ஒரு பெரிய நகரின் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நின்றது. அபு ஸிர்ரும், தோழனும் கப்பலின் தலைவருக்கும், மற்ற நண்பர்களுக்கும் நன்றி சொல்லி விடை பெற்றுக்கொண்டு, கப்பலை விட்டுக் கீழே இறங்கினர்.