பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

1.

 எகிப்து தேசத்தில் அலெக்சாந்திரியா நகரில் இரண்டு நண்பர்கள் இருந்து வந்தனர். ஒருவன் சாயம் காய்ச்சுபவன், அவன் பெயர் அபு கிர்; மற்றவன் முடி சிங்காரிக்கும் மருத்துவன்.அவன் பெயர் அபு ஸிர்.இருவரும் கடைத்தெருவிலே கடைகள் வைத்திருந்தனர். இரண்டு கடைகளும் ஒன்றை ஒன்று அடுத்திருந்தன.
சாயக்காரன் பொய்யன், ஏமாற்றுக்காரன், அவன் தொழிலைச் சரியாகச் நடத்துவதில்லை. பித்தலாட்டம் செய்வதே அவன் கொள்கையாயிருந்தது. மக்களை ஏமாற்றுவதில் அவன் கூச்சமோ, வெட்கமோ கொள்வதில்லை. எவராவது துணியைச் சாயத்தில் முக்குவதற்காகக் கொணர்ந்து கொடுத்தால், அவன் முதலிலேயே கூலியை வாங்கிக்கொள்வான். வாடிக்கைக்காரர் வெளியே போனவுடனேயே, அவன் வாங்கிய-