பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 கல்லவை ஆற்றுமின் 'தலை காது மூக்கு கை கழுத்து மார்பிடுப்புடன் தாள் என்ற எட்டுறுப்பும் தங்க நகை வைரககை ரத்தனம் இழைத்த நகை தையலர்கள் அணியாமலும் விலை குறையும் ஆடைகள் அணிந்துமே கோயில்வர வேண்டுமென்றே பாதிரி விடுத்த ஒரு சேதியால் விடமென்று கோயிலை வெறுத்தார்கள் பெண்கள் புருடர் நிலை கண்ட பாதிரியின் எட்டுறுப்பே யன்றி நீள் இமைகள் உதடு நாக்கு - கிறைய நகை போடலாம் கோயிலில் முகம் பார்க்க நிலைக் கண்ணாடியும் உண்டென இலைபோட் டழைத்ததும் நகைபோட்ட பத்தர்கள் எல்லாரும் வந்து சேர்ந்தார் ஏசுநாதர் மட்டும் அங்கு வரவில்லையே இனிய பாரத தேசமே' சமயத்தில் சீர்திருத்தம் காண விழைந்த கவிஞர் சமுதாயத்திலும் சீர்திருத்தம் காண விழைந்தார். நயமாகவும் பயமாகவுகம் பலப்பல வழிகளைப் பாடிக் காட்டினார். ஆயினும் சமுதாயம் அதற்கெல்லாம் இசையாதே! எனவே புரட்சி வழி ஒன்றே சமுதாய வாழ்வைச் சரி செய்ய-ஏற்றத் தாழ்வை அகற்ற-ஏற்ற வழி என்று கண்டார்-எழுதினார். ஒடப் பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகி விட்டால் ஓர்நொடிக்குள் ஒடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பராகிடுவார் உணரப்பா நீ" என்ற அவர்கள் வாக்கு இன்றும் தேவையோ என்ற வகையில் சமுதாயம் மாசுபடிந்து வருகின்றது. நல்ல கவிஞர் வாக்கு நாட்டில் பொய்யாவதில்லை என்ற பழமொழி ஒன்று