பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 கல்லவை ஆற்று மின் "அந்தரம் பார்க்கின்றமை அவர்க்கிலை உனக்கே ஐயா என்றும், மாகத்தோள் வீர பெற்றால் எங்களிடம் வைத்து வாழ்த்தி என்றும் சிலேடை வகையால் பாடி, இராவணன் முடிய ஏற்பாடு செய்தாள் சூர்ப்பனகை எனக் காட்டுவர். எனவே புறப்பகைவர்களாகிய பாண்டவர், இராமன் ஆகியோரைக் காட்டிலும் இரண்டு இதிகாசங்களிலும் உட்பகை ஆட்சியே விளக்கப் பெறுகிறது. உட்பகையே புறப் பகையைக் காட்டிலும் கொடியது என்பதனை வள்ளுவர், "வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு (உட்பகை 2) என்கின்றார். ஆம்! இன்று அரசியலில் மட்டுமன்றித் தனி மனிதர் வாழ்விலும் நாடுகளுக்கிடையிலும் இந்த உட்பகை யால் வீடும் நாடும் ஊரும் உலகும் உருக்குலைவதைக் காண்கின்றோம். எனவேதான் சான்றாண்மை மிக்க வள்ளுவர் இக்குறளைத் தெள்ளத் தெளியக் கூறுகின்றார். நாடாளும் நல்லவரும் மற்றவரும் இதனை உணர்ந்து, சுற்றிச் சூழ்ந்திருப்பாரைக் கண்டு தெளிந்து வாழின் நாடும் நாமும் நானிலமும் நலம்பெற வாய்ப்பு உண்டு. மேலும் தனி மனிதரிடமும் இந்த உட்பகை உள்ளது. உள்ளத்தே நல்லன அரும்பாது தடுத்து, கொடுஞ்செயலைச் செய்யும் நினைவைத் தோற்றுவிக்கும் உட்பகையினை மனிதன் களைதல் வேண்டும். காம உட்பகைவனும்' என்ற தெய்வமணிப் பாடலில் வள்ளலார் உட்பகைதனை நன்கு விளக்குகிறார். பொறியிலீர் மனம் என் சொல் புகாததே' என்பர். அவ் உள்ளத்தால் உள்ளலும் தீதே என்பார் வள்ளுவர். ஆம்! தனி மனிதன் தன்னைக் கெடுக்கும் தீய சிந்தனைகளையும் அதன் வழி உருவாகும் செயல்களையும் நீக்குவானாயின் அவன் வாழ்வு சிறப்பதோடு அவனுடைய வீடு, நாடு, நானிலம் அனைத்தும் சிறக்குமல்லவா?