பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டு கலம் 119 மட்டும் சுட்டிக்காட்டி அமைகின்றேன். 'இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு? என்று வள்ளுவர் கேட்கிறார். ஆம்! நாம் மனிதனாகப் பிறந்து விட்டோமே! எனவே மற்ற உயிர்களை-மற்ற மனிதரை ஒத்து நோக்க வேண்டும். அவர்கள் கொன்றன்ன கொடுமை செய்தாலும் மறந்து அறனல்ல செய்யாது நலம் புரிய வேண்டும். இந்த மனிதப் பண்பு இல்லையானால் நாம் மனிதர் இல்லை. விலங்கு, மரம் இவற்றிலும் கீழாக எண்ணப்பட வேண்டியவர்களே. எனவே தீங்கு செய்தவர் களுக்கும் நன்மை செய்து, எல்லாரும் இன்புற்றிருக்கும் வழி வகுத்து வாழ்வோமாயின் வையம் பூத்துக்குலுங்கும் புன்னகைப் பூஞ்சோலையாக விளங்காதா! அத்தகைய நலம் நாடி நல்லன ஆற்றி நாம் ஒன்றி வாழ வேண்டுமெனக் கேட்டு விடைபெறுகின்றேன். "எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்’ என்று கூறினார் பாரதியார். ஆம் நம் நாடு சாதி சமயங்கள் பலவற்றால் நிறைந்த ஒன்றாயினும் நம் ஆட்சிமுறைச் சட்டப்படி நம் நாடு சாதி சமய வேறுபாடற்ற ஒரு சமுதாயம் கொண்ட நாடு எனவே கொள்ளவேண்டும் நம் நாட்டில் வாழும் அனைவரும் உள்ளம் ஒன்றினவர்களாய்-சிந்தனை ஒன்றுடையவர்களாய் வாழக் கடமைப்பட்டுள்ளோம். அண்ணல் காந்தி அடிகளார் இத்தகைய உயரிய பாரதப் பண்பாட்டு நெறியினைக் காணவே விழைந்து மறைந்தார். ஆனால் இன்று நாட்டில் காண்பதென்னே! "வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்கள் என்றால், சூழ்கின்ற பேதம் அந்தத் தொகை இருக்கும் என்று பாரதி தாசன் கூறியபடி மொழியாலே-இனத்தாலே-சாதியாலே -நிலப்பிரிவாலே-வேறு பலவகையாலே பிரிந்து வாழ்கின்ற