பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேன்மையே விழைக 11 ஒறுத்தும் மற்றவரை வாழவைக்கும் நல்வினையே மேற் கொள்வானாயின், அவன் என்றென்றும் தாழாது உயர்வான் என்பது உறுதி. மக்கள் இந்த உண்மையினை உணர்ந்து வாழின் தாம் வாழ்வதோடு சமுதாயத்தையும் வாழவைத்த பெருமையினைப் பெறுவர். அப்பெருமை பெறும் நல்லுணர்வு எல்லார் உள்ளத்திலும் அரும்புவதாக என வாழ்த்தி ஒளவையார் அடிகளை உங்கள் முன் வைக்கிறேன். ‘வாழச் செய்த கல்வினை அல்லது . ஆழுங் காலை புணைபிறி தில்லை (புறம் 367) மேன்மையே விழைக உலகில் எத்தனையோ வகையான மக்களை நாம் காண் கின்றோம். பலர் பலவகையில் வாழ்க்கை நடத்துகின்றனர். சிலர் வாழ்வில் உயர்கின்றனர்; சிலர் வழுக்கி வீழ்கின்றனர். நெட்டுயிர்ப் போடு உற்ற பிணமாகச் சிலர் ஏதோ பெற்று எப்படியோ இயந்திர வாழ்க்கை வாழ்கின்றனர். மக்கள் வாழ்க்கை அமைவின் போக்கிலேதான் இன்று எத்தனை எத்தனை மாறுபாடுகளையும் வேறுபாடுகளையும் காண முடிகின்றது. நேற்று, செல்வராக-உயர்பதவி உற்றவராகஇருந்தவர், இன்று சாதாரணமாகத் தள்ளப்பெறுகின்றார். நேற்று கீழ் நிலையில் ஒதுக்கப் பெற்றிருந்தவர்-எல்லாவகை யாலும் தாழ்த்தப் பெற்றிருந்தவர் இன்று எதிர்பாராத வகையில் உயர்த்தப் பெறுகின்றார். தாழ்ந்தோர் உயர்வர் என்றும் மிக உயர்ந்தோர் தாழ்வர் என்றும் அறம் சூழ்ந்தோர் உரைக்கும் உரை கண்டாம் என்ற சிவப்பிரகாசர் மொழிப்படி இந்த உயர்வும் தாழ்வும் உலக வாழ்வில் நீக்க முடியாதன. இவற்றில் உயர்ந்தோர் தாழ்ந்தால்-உலகுக்கு