பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 கல்லவை ஆற்றுமின் என்று அவர்கள் 30-4-1950இல் தம் முன்னுரையில் குறிப் பிட்டுள்ளார்கள். ஆம். அன்று எண்ணிய எண்ணம் இன்று செயலில் முகிழ்ப்பது கண்டு மகிழ்ச்சி பிறக்கிறது. கால் நூற்றாண்டு கழிந்த பிறகாவது நாடு விழிப்படைந்த நிலை க்ண்டு மகிழ முடிகின்றது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் அவர்கள் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருவதை நாடு காண்கின்றது. அடுத்த ஆண்டு முதல் முதுகலை வகுப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கும் பாடமுறையும் தேர்வு முறையும் மாற்றம் பெற்றுள்ளளமை அறிவோம். பருவ முறைத்தேர்வும் பயிலுமிடம் தரும் தகுதியும், புகுத்தப் பெறு கின்றன. அவற்றுடன் மாணவர்தம் சமூகத் தொண்டி னுக்கும் இட்ம் கொடுப்பதையே ஈண்டு நான் குறிக்க விரும்பு கிறேன். ஆம்! ஒவ்வொரு மாணவரும் பயிலும் காலத்தில் சமூகத்தொண்டினைக் கட்டாயம் செய்தே தீரவேண்டுமெனத் தீட்டி, அதற்கென நூறு மதிப்பெண்களும் ஒதுக்கப் பெற்றுள்ளமை போற்றுதற்குரியதாகும். எனவே அடுத்த ஆண்டு முதல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குச் சமூகத் தொண்டு செய்யும் நல்ல வாய்ப்பு தரப்பெற்றுள்ளது. அவர் வழியே நாடு நலம் பெற வகை காணப்பெற்றுள்ளது. சிலர் விளம்பரத்துக்காகப் படம் எடுத்துக் கொண்டு பட்டுப்புடவையும் பகட்டுடையும் டெரிலின் ஷர்டும் பேண்டும் நலுங்காமல் கிராமத்தொண்டு செய்வதாகப் பத்திரிகைகளில் படிக்கிறோம். ஆனால் இந்தப் புதிய அமைப்பில் அந்த வெளிவேடத்துக்கு இடம் தருதல் கூடாது. மாணவர்கள் உண்மையில் கிராமத் தொண்டினை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் நல்ல சமுதாயத் தொண்டினை நாடு எதிர்நோக்கி புள்ளது. தாள்களில் தீட்டப்பெறும் திட்டம் ஏட்டளவில் அல்லாது-விளம்பர அளவில் நில்லாது-நேரிடையாக