பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருந்துமா? 13 கீழோருக்கு மிக உயர்ந்த பதவிவர வேண்டும் என்பதில்லை. சிறுபதவியிலும் தடுமாறுவர். முந்திரி இன்று பலரால் மறக்கப்பட்ட சிறு எண்-கீழ் எண். அது தமிழ் நெடுங்கணக்கில் மிகத்தாழ்ந்தது. அதிலிருத்து அடுத்த தாழ்ந்த-ஆனால் முத்திரியை விடச் சற்று உயர்ந்த காணி அளவில் கீழோர் உயர்ந்தாலும் அவர்களால் உலகத்துக்குக் கொடுமை உண்டாகும் என நாலடி உணர்த்துகின்றது. அதுமட்டுமன்றி, இந்திரனாக எண்ணிக் கொடுமை இயற்றி, தான் பெற்ற உயர்வையும் பிறவற்றையும் விடும் என்றும் கடைசியில் சுட்டுகிறது. எனவே சமுதாயம் செம்மையுற வேண்டுமானால் -மக்களும் பிற உயிர்களும் துன்பமற்று இன்பவாழ்வில் வாழ வேண்டுமானால் நல்லவர் உயரவேண்டும். அவர்கள் உயரா விட்டாலும் தவறில்லை; அல்லவர் உயரக் கூடாது என்பதே நாலடியின் நல்ல ஆழ்ந்த கருத்தாகும். எனவே நாட்டில் வாழும் நாம்-நம் சமுதாயம் வளர அச்சமுதாயத்தின் இன்பம் தழைக்க வேண்டி நல்லவர் உயரப் பாடுபட வேண்டும் என்று கூறி, அந்த நாலடியின் முழுப்பாடலையும் உங்கள் முன்வைத்து விடைபெறுகின்றேன். - "சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர் எக்காலும் சொல்லார் மிகுதிச்சொல்-எக்காலும் முந்திரி மேல் காணி மிகினும் கீழ்தன்னை இந்திரா எண்ணி விடும்’ (கீழ்மை-6) பொருந்துமா? தொல்காப்பியர் தம் செய்யுள் இயலில் 'அவற்றுள், சூத்திரர்தானே ஆடி நிழலின் அறியத் தோன்றி o - நாடுதல் இன்றிப் பொருள் கனி விளங்க (செய்-471) யாப்பினுள் தோன்ற யாத்தமைப் பதுவே"