பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவை. உயர்ந்த குறிக்கோள் 151 ஆகிய பண்பாட்டு நிலைக்களன்களில் தம்மைச் செலுத்திச் செம்மை நெறியில் வாழ வேண்டிய மாணவர் உலகில் பல்வேறு சிக்கல்கள் உண்டாவதையும் அவற்றின் வழி ஆரவாரம் வேலை நிறுத்தம், மாறுபாட்டு,உணர்வு முதலியன மிகுவதையும் இன்று உலகின் பலபாகங்களிலும் காண்கின் றோம். இவற்றின் காரணங்களை அலசி ஆராய்ந்து பார்ப்பின் அடிப்படை உண்மை ஓரளவு விளங்காமற் போகாது. மாணவர் சமூகத்திற்கு மட்டுமின்றி, உலகில் ஒவ்வொரு வருக்கும் எல்லாக்காலத்திலும் தீர வேண்டிய பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கும். அவ்வப்போது வாழ்கின்ற மக்கள் அவ்வவற்றை ஆராய்ந்து தீர்வு காண்பது இயல்பு. இன்று நம் மாணவரிடை வளரும் சிக்கல்களுக்கு அடிப்படை யான காரணங்களை என்னவென்று ஆராய்ந்து, அவற்றை நீக்க வேண்டுவது நமது கடமையாகும். இன்றைய சிக்கல்களுக்கு உலகில் பல தலைவர்கள் பல்வேறு காரணங்களைக் காட்டுவர். ஆழ்ந்து நோக்கின் அவை அனைத்தும் ஒன்றிலேயே சென்று முடியும் என்பது நன்கு விளங்கும். அவர்தம் வாழ்வில் உயர்ந்த குறிக்கோள்' இன்மையே இந்த அடிப்படை. கல்வி கற்கும் மாணவர் உள்ளங்கள், உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் என்று வள்ளுவர் கூறியபடி உயர்ந்த குறிக்கோளை எண்ணி அதன் வழியே செயலாற்றினால் நாடும் உலகும் நன்கு செழிப்புற்று வளரும். நாட்டிலும் உலகிலும் உள்ள எத்தனையோசிக்கல்கள் இல்ல்ையாகி அமைதியும் அன்பும் நாட்டில் மலரும். ஆனால் அரசியல் தலைவர்களும் பிற நல்லவர்களும் ஏனோ இத் துறையில் அதிகமாகக் கருத்திருத்துவதில்லை. உயர்ந்த குறிக் கோள் எதுவாக இருக்கவேண்டும்-அதைக் கல்வி அளிக்க முடியுமா?-அக்கல்வி பயிலும் இன்றைய மாணவர்கள் அக்' குறிக்கோளைப் பற்றாமைக்குக் காரணங்கள் யாவை? அக் குறைபாடுகளை நீக்க வழி என்ன என்று இவ்வகைகளில்