பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i54. கல்லவை ஆற்றுமின் “தாம் இன்புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்’ என விளக்கிக் காட்டியதை உணர்ந்தோம். எனவே கல்வி தாம் பெற்ற இன்பத்தை உலகுக்கு அளிப்பதே என்பது தெளிவாகின்றது. இதற்கு உரைகூறவந்த மணக்குடவர் 'அழுக்காறு செய்யாது இன்புறுதல் அறமாதலின்... அது கல்வியாலே வரும் என்றார். எண்ணும் எழுத்தும் கல்வியின் அடிப்படை, எண்' என்ற,சொல்லுக்குப் பொருள் கூற வந்த உரையாசிரியர் எண் என்றது இருமை இன்பமும் தமது உள்ளத்தால் தெரிந்து பிரித்து எண்ணிக் கொள்வது' எனக் காட்டுகின்றார். எனவே கல்வி என்பது மக்கள் உள்ளத்தில் உள்ள அறியாமை மட்டும் போக்குவதாகாது. அக்கல்வியைக் கற்பவர் உள்ளத்திலே அழுக்காறு, வேற்றுமை, தன்னலம் முதலிய எல்லாத் தீமைகளும் மறைந்து, 'நாடெங்கும் வாழக் கேடொன்று மில்லை என்ற உணர்வு அரும்புதல் வேண்டும். தான்பெற்ற இன்பத்தை உலகுக்கு அளித்தலே கல்வியின் அடிப்படை என்றார் வள்ளுவர். ஆனால் அந்த அடிப்படை இன்றைய கல்வி நிலையிலோ-கற்கின்ற மாணவர் உள்ளத்திலோ இல்லை எனக் கண்டோம். இன்றைய கல்வியால் போட்டி மனப்பான்மையும், போராட்ட உணர்வும், வேலை அல்லது தொண்டில் ஈடுபாடற்ற மனநிலையும் வளர்வதைக் காண்கின்றோம். இவற்றின் அடிப் படையிலேயே பல்வேறு சிக்கல்கள் நாட்டிலும் உலகிலும் உருவாகின்றன. இவை நீங்க எந்த வேறுபாட்டு உணர்ச்சியும் மாணவர் உள்ளங்களில் தோன்றாத கல்வி அமைக்க வேண்டும். எல்லாரும் எல்லாச் செல்வமும் எய்துகின்ற செம்மை வாழ்வை நாட்டில் மலரவைக்கும் நல்ல உள்ள முடையவர்களை-எந்த வேறுபாடும் எண்ணத்திலும் தோன்றாத பண்பாடு நிறைந்தவர்களை-தேவையாயின் தம்மையே தியாகம் செய்யும் சீலர்களை உண்டாக்குவதே