பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை-காப்பிய நயம் 31 எல்லா உயிர்களும் வாழ இன்றியமையாதது உணவாகும். 'உண்டி முதற்றே உணவின் பிண்டம்' என்பது சங்கச் சான்றோர் வாக்கு. அந்த உணவினையே சாத்தனார் ‘ஆருயிர் மருந்து என்கிறார். ஆதிரை இட்டனள் ஆருயிர் மருந்து' என்பது அவர் வாக்கு. மணிமேகலை தன் அமுத சுரபியோடு ஆதிரையின் வீட்டு வாயில் நிற்க, பாரக மடங் கலும் பசிப்பிணி அறுக என வாழ்த்தி, ஆதிரை உணவினை அதில் இட்டாள். கற்புடை நல்லாளாகிய அவள் இட்ட அந்த உணவே, இறுதி வரை எடுக்க எடுக்கக் குறையாது வளர்ந்து உலகை உண்பித்தது. உயிர்களிடத்து யாதொரு வேறுபாடு மின்றி உண்டியும் உடையும் உறையுளும் தருதலே அறம் என்ற சமுதாய நெறியினைச் சாத்தனார், "அறமெனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இது கேள்; மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல் (25,228-31) எனக் காட்டுகிறார். ஆம்! இன்றளவும் உலகச் சமுதாயம் இந்த மூன்றின் நிறைவைத் தேடித் தானே திரும்பத் திரும்பத் திட்டங்கள் தீட்டுகிறது. ஆதிரையை முன்னிறுத்தி இல்லற நெறியினையும் கற்பின் திறனையும் புகழ்ந்த சாத்தனார், இல்லற வாழ்வினை மேற் கொள்ளாதவன் எத்தனை அறஞ்செயினும் பயனில்லை என்ற உண்மையினை, 'பத்தினி இல்லோர் பல்லறம் செயினும் புத்தேள் உலகம் புகார்’ (22,117-8) என்று வள்ளுவர் வழி நின்று விளக்க உரைக்கிறார். உணவின் இன்றியமையாத பாலின் சிறப்பினையும். அதைத் தரும் பசுவின் சிறப்பினையும் காட்டி, அத்தகைய நல்ல.பசுவின்ன யாகத்தின் பொருட்டு கொலை செய்தல் தக்க தன்று என்பதனையும் வள்ளுவர் வழிநின்று விளக்குகின்றார்.