பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை-காப்பிய நயம் 33 எனவும் செற்றமும் கலாமும் செய்யாது அவற்றை விட்டு நீங்க வேண்டியது மக்கள் கடமை எனவும் வற்புறுத்துகிறார். இலக்கிய மரபில் போற்றப்பெறும் இயற்கையினைப் பாராட்டும் சிறப்பினையும் சாத்தனார் கைவிடவில்லை. பூம்புகாரினைப் பூங்கொடியாகிய பெண்ணாகவே கண்டு பாதாதிகேச வருணனை செய்யும் அடிகள் (5/109.122) உள்ளத்தைத் தொடுவனவாம். அப்படியே இந்திரதனுவென இயங்கும் அகழியின் இயற்கையினைக் காட்டும் எழிலோவிய மும் எண்ணி எண்ணிப் போற்றற்குரிய ஒன்றாகும். சாத்தனாருடைய ഉഖങ്ങഥ நயம் உயர்ந்த வகையில் அமைவதாகும். மணிமேகலை வாடிக் கண்ணிர்விட மாதவி தன் கையால் அவள் முகத்தில் கண்ணிர் துடைத்து நின்றதை,

  • மாதவி மணிமேகலை முகம் நோக்கி

தாமரை தண்மதி சேர்ந்தது போல காமர் செங்கையின் கண்ணிர் மாற்றி" (3,11-13) என்று விளக்குவது ஒர் எடுத்துக்காட்டு. சாத்தனாருடைய கிளைக் கதைகளும் இலக்கிய நயம் வாய்ந்தவை. இவ்வாறு எல்லா வகையான காப்பிய வளமும் நலமும் சார்ந்ததோடு, தன் காவியத்தைச் சமுதாய வாழ் விற்கு வழிகாட்டியாகவே அமைத்துப் பாடிய காரணத்தால் தான் மணிமேகலை இன்றும் வாழ்கிறது; என்றும் வாழும். அவர் வாய்மொழியைப் பின்பற்றி வாழ்வாங்கு வாழ்ந்து, உலகை உயரச் செய்ய வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.