பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைநிலை 39 வினையும் பிறவற்றையும் உள்ளடக்கி உயிர்ப்பன்மையாகி' என்றும் காட்டி எவ்வுயிரும் பராபரன் சன்னிதியாகும்’ என்ற உண்மையினைத் தெளிவாக்குகின்றார். பின், அவ்வுயிராகி நின்றதோடமையாது, அவ்வுயிரினும் வேறாகி அவ்வுயிர்களின் உற்பவ காரணமாகி நின்று அவ்வுயிர் களுக்கு உயிராகி நிற்கின்ற பெருநிலையினையும் சுட்டுகின்றார் ஆசிரியர். இறைவேறு உயிர்வேறு என்ற தத்துவமும் நீயும் நானுமாய் ஏகபோகமாய் இரண்டறக்கலக்கின்ற தத்துவமும், அவன் ஒருவனே அவையாய் இவையாய் அல்லனவாய் அப்பாலுக்கப்பாய் நிற்கின்ற நிலையும் பிறவும் இவற்றால் விளக்கமுறுகின்றன. வன்றோ! பின் அந்த இறையவனே வேண்டுவார்க்கு வேண்டுவன ஈயும் தன்மையனாய்காட்சிப் பொருளாகி நேராகி நிற்கின்ற நிலையினையும் 'அல்லார்க்கு அல்லனாய் அப்பாற்பட்டு மறைந்து நிற்கும் நிலையினையும் நேராகித் தோன்றல் இலதாகி நின்றார்’ எனக் காட்டுகின்றார். இவ்வாறு வெள்ளிமலையில் வள்ளியின் காதலுக்கு ஏங்கி நின்ற கள்வனே, யாவுமாய் எல்லாமாய் நீக்கமற நிறைகின்ற இறைவன் என்பதையும் அவனே அடியவர் பொருட்டு மானுடமாய், பிற உயிர்களாய்ப் பிறப்பதுபோல் காட்டி ஆட்கொள்வான் என்பதையும் காட்டி அவனைப் பணிய வேண்டிய இன்றியமையாத் தன்மை யினைச் சுட்டி, தம் கந்தபுராணத்தை முடிக்கின்றார் கச்சியப்பர். ஆம்! அத்தகைய நல்லவன் பாதத்தை அடைய நாம் செய்ய வேண்டுவது, ஆராத காதல் கொள்ள வேண்டுவதே. வள்ளியம்மையார் காதல் கொண்டார்-ஆராத காதல் கொண்டார்-அவன் வந்து அவரைக் கொண்டு சென்றான். நாமும் அவனே அனைத்தும் என்ற உணர்வோடு, தூய உளத்தோடு, வேற்றுமையும் விருப்பும் வெறுப்பும் அற்று, ஆராத காதல் கொண்டு அவனை நினைத்தால் அவன்