பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கல்லவை ஆற்றுமின் யும் இணைத்த சேக்கிழார், மூன்றாவது அடியில் உலகம் உய்ய இருட்கடு உண்ட இறைவன்' அருளையும் உலகீன்ற கன்னியாம் அன்னையின் அருளையும் இணைத்து இவ்வுலகு உய்ய அந்த அருள் நிலை என்றும் நம்மைச் சூழ்ந்து வழி காட்டுவதை உணர்த்துகிறார். இவ்வாறு தேவாரம் பாடிய மூவர் வாழ்க்கையில் எங்கு நோக்கினும் இறையருள்-சிவனருளே சேக்கிழார் பாவில் தெரியக் காண்கிறோம். பிற நாயன்மார் வாழ்விலும் இந்த அருளே ஆட்சிபுரி கின்றது. மாறுபட்ட போர் நிலையிலும் தன்னைக் கொல்லும் மாற்றானைக் காப்பதிலும் இந்த அருளே களி நடம்புரியக் காண்கிறோம். மெய்ப்பொருள் நாயனாரை மாறு வேடத்தில் கொல்ல வந்த முத்திநாதனை 'இடை தெரிந்தருள வேண்டும் என்று தத்தனும், பின் மெய்ப் பொருளார் முத்திநாதனைக் கண்டு ஆகமத்தைக் கூற வந்ததாகச் சொன்னபோது, பிரான் அருள் செய்த இந்த மாறிலா ஆகமத்தை வாசித்தருள் செய வேண்டும்’ என்று மெய்ப்பொருளாரும் கூறியதாகக் காட்டி, அவன் கொலை செய்ய வந்ததும் இறையருளே என்னுமாறு வடிக்கிறார் சேக்கிழார். பின் வென்றவர் மெய்ப்பொருளாரே என்பதனை "மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள் எனத் தொழுது வென்றார்’ எனவும் காட்டுகின்றார், ஏனாதி நாதனார் பகைவன் நீறணிந்த காரணத்தாலே அவன் கருத்தை முடிவிக்கத் துணையாக நின்றதோடு, அவன் நிராயுதனைக் கொன்றான் என்ற பழியுண்டாகாதவாறு, 'இரும் பலகை கைவாளுடன் அடர்த்து நேர்வாற் போல் நின்றார்’ எனக் காட்டி, முடிவில்