பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கல்லவை ஆற்றுமின் மட்டும் சைவ நெறி நோக்கி ஆற்றுப்படுத்தவில்லை அவர். ஆம்! அவனி உள்ளளவும் வாழ்கின்ற உயிரினங்களை வள்ளலாம் தானே வந்து தலையளித்து அருள் காட்டி ஆட்கொள்ளும் இறைவன் அருளைப் பெற ஆற்றுப்படுத்து கின்றார். நாமெல்லாம் அவர் காட்டிய தெய்வ நெறியில் எது வரினும் அல்லது எது போகினும் எல்லாம் சிவனருளே என்னும் தவஞானம்-தலைஞானம்-மெய்ஞ்ஞான்ம் வரப் பெற்றவர்களாய் வாழ்வாங்கு வாழக் கடமைப் பட்டவர் களாகின்றோம். ஆம்! இந்த அடிப்படை உண்மையை விளக்கி உலகுக்கு வழிகாட்டவே கோவை சேக்கிழார் பண்பாட்டுக்கழகம் செயலாற்றி வருகின்றது. வையத்தை வாழ வைக்கும் சிவ நெறியை-சிவனருளைப் போற்றுவதே அதன் பண்பாடு-பணி. அக் கழகத்தின் தொண்டு சிறக்க என வாழ்த்தி அமைகின்றேன். முருகன் முருகு என்ற சொல்லுக்கு அழகு என்பது பொருள். எங்கெங்கே அழகுநடமாடுகிறதோ அங்கெல்லாம் முருகன் நிலவுகிறான் என்று கொண்டனர் முன்னோர். செங்கேழ் முருகன் காதலித்த வான் தங்கிய வரை சூழ் உலகமும்’ என்று நச்சினார்க்கினியர் "சேயோன் மேய மை வரை உலகமும்’ என்ற தொல்காப்பியர் அடிக்கு (திணைநிலத் தெய்வமாக)ப் பொருள் கொண்டார். முருகனுக்குச் சேயோன் என்ற ஒரு பெயர் உண்டு. உயர்ந்த வானோடு கலந்த மலைகளின் உச்சி யில் இம்முருகன் கோயில் கொண்டு தங்கியுள்ளான் என இதனால் அறிகிறோம். (சேய்மையில் உள்ளவன், செய்யவன்) முருகு என்பதற்கு 'அழகு என்ற பொருளோடு, இளமை, எழுச்சி, மணம் என்ற பொருள்களும் உள்ளன. ஆகவே