பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 நல்லவை ஆற்று மின் வகையில் மாதந்தொறும் அக்கார்த்திகை நாளை முருகன் நாளாகக் கொண்டு மக்கள் விரதமிருக்க, கோயில் தொறும் விழாவும் நடைபெறுகின்றது. இம்முருகன் பிறந்த வைகாசி விசாகத்தே பல கோயில்களில், சிறப்பாகத் திருச்செந்தூரில் பெருவிழா இன்றும் நடைபெறுகின்றது. இவ்வாறு கந்த புராண சுப்பிரமணியனும் தமிழ்க்கடவுள் முருகனும் ஒன்றாக இணைய, தமிழகமே அவனுக்கு எங்கும் கோயில் அமைத்துப் பல விழாக்கள் கொண்டாடுகின்றது. முருகன் இளையனா' வழிபடத் தண்டாயுதபாணியாகிறான். முருகனுக்குத் தமிழ் நாட்டிலேதான் கோயில் அதிகம். ஆயினும் தற்காலத்தில் தமிழர்கள் சென்று வாழும் தில்லி போன்ற நகரங்களில் அவர்கள் முருகன் கோயிலை அமைத்து வழிபடுகின்றனர். அப்படியே தமிழ் நாட்டிலிருந்து மேலை நாடுகளுக்குச் சென்று வாழ்வோர் அங்கங்கே முருகன் கோயிலை அமைத்துள்ளனர். பாரிஸ் நகரிலும் இலண்டனி லும் அமெரிக்காவில் சில ஊர்களிலும் முருகன் கோயில்கள் உள்ளன. கீழை நாடுகளில் தமிழர் பெரும்பாலராக வாழும் மலேயா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிகமாகவும் பிற விடங்களில் அருகியும் முருகன் கோயிலும் முருகன் சிலைகளும் (சிவன் கோயில்களில்) உள்ளன. இலங்கையிலும் முருகனுக்குப் பல கோயில்கள் உள்ளன. இவ்வாறு தமிழர் வாழும் இடங் களிலெல்லாம் முருகன் கோயில் உள்ளமையால் முருகன் தமிழ்க் கடவுள் என்பது தேற்றமாகிறது. முருகனைப் பற்றிக் கந்தபுராணம் மட்டுமன்றி வேறு எத்தனையோ இலக்கியங்கள் உள்ளன. முருகன் அழகனாக வும் இளையனாகவும் உள்ளமையின் அவனைப் பற்றிய பிள்ளைத் தமிழே அதிகம் எனலாம். இராமலிங்க அடிகளார் தம் ஆறுதிருமுறைகளில் ஐந்தாம் திருமுறை முற்றும் தணிகை முருகனைப் பற்றியதே. சங்க இலக்கியங்களில்