பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் 59 'வரைசேரும் முகில் முழவ மயில்கள் பல நடமாட வண்டு பாட விரைசேர் பொன் இதழிதர மென்காந்தள் கையேற்கும் மிழலை யாமே (1,132-4) என்ற ஒரு சான்று போது மென்றமைகின்றேன். இவர்தம் பாடல்வழி இறைவனைப் பற்றிய பல்வேறு பண்புகளையும் அருளிச் செயல்களையும் அறிந்து கொள் வதோடு, அக்காலத்தில் திருக்கோயில்களில் முழங்கிய பல்வேறு வாத்தியங்கள் பற்றியும் வழிபாட்டு முறை பற்றி யும், சமுதாய வழக்காறுகள் பற்றியும் பிறபற்றியும் அறிந்து கொள்ளலாம். இவர்தம் தேவாரத்தினைச் சமயநூல் என்று சொல்லுவதோடு, சைவ சித்தாந்த சாத்திரங்களின் நுட்பங் களை விளக்குவதால் சாத்திர நூலெனவும் கொள்ளலாம். மேலும் கி. பி. ஆறாம், ஏழாம் நூற்றாண்டின் தமிழ்நாட்டு நிலையினை அறிந்து கொள்ள இவர்தம் பாடல்கள் பயன் படுவதால் இதை வரலாற்று நூல் எனினும் மிகையாகாது. அறியப்பெறுவன இவர் பாடல் வழியே இவர் காலத்தில் வாழ்ந்த பிற நாயன்மார்கள் பற்றியும் அறியலாம். சிவபெருமான், உமை யம்மையார் தவிர்த்து பிற தெய்வங்களைப் பற்றியும் அறிய லாம். விநாயகரை இவர்தம் பிடியதனுரு உமைகொள’ என்ற பாடல் வழியே (1.123-5) முதல் முதல் தமிழில் பாடினார் என்பர். இவர் காலத்துப் பல்லவர் சேனாதிபதி யாக வாழ்ந்த சிறுத்தொண்டர், சாளுக்கிய புலிகேசியை (II) வென்று, வாதாபியைக் கைக் கொண்ட போது, அங்கிருந்து விநாயகரைக் கொண்டு வந்து தம் ஊராகிய திருச்செங்காட் டங்குடியில் நிறுவினார் என்றும் அதனாலே அக்கோயில் கணபதிச்சரம் எனப் பெயர் பெற்றதென்றும் அறிகிறோம்.