பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோவையார் 61 வரலாற்றை அறிய இவர்தம் பாடல்கள் மிகவும் பயன்படு கின்றன என்பதும் அறியக் கிடக்கின்றன. (இவ்வரலாற்றுக்குச் சென்னை, சைவ சித்தாந்த சமாசம் 1937ஆம் ஆண்டின்; வெளியிட்ட திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரப் பாடல்’ என்ற நூலே துணை நின்றது. இதில் குறிக்கப்பெறும் திருமுறை, பதிகம் பாடல் எண்கள் அப்பதிப்பை ஒட்டியனவே). திருக்கோவையார் கோவை என்பது அகப்பொருள் பற்றிய நூல். பல பொருள் பற்றிய கருத்துக்களை இணைத்துச் செய்யப்பெறும் நூல்கள்-ஆசாரக் கோவை, மும்மணிக் கோவை போன்ற நூல்கள் பல இருப்பினும், கோவை’ என்று தனியாகக் கூறும் போது இச்சொல் அகப்பொருள் பற்றிய நூல் ஒன்றையே குறிக்கும். சங்க காலத்துக்குப் பின் தமிழில் பல்வேறு வகைப் பட்ட சிற்றிலக்கியங்கள் தோன்றின. அவற்றைத் தொண் ணுற்றாறு வகைப் பிரபந்தங்கள் எனப் பிரித்தனர். அவற்றுள் கோவை என்பதும் ஒன்று. திருக்கோவையாரும் இந்தப் பிரிவில் அடங்கும். இதற்குத் திருச்சிற்றம்பலக் கோவையார்’ என்றும் பெயர் உண்டு. பிற கோவைகளெல்லாம் பாட்டுடைத் தலைவன் பெயரொடு இணைந்தோ வேறு பெயர்களொடு இணைந்தோ நின்று கோவை யாகக் கூறப் பெறினும், இந்நூல் மட்டும் இதன் தொன்மையும் சிறப்பும் கருதி திரு” என்ற அடை மொழி ஒன்றுடனே நின்று, திருக் கோவையார்' என்ற சிறப்புப் பெயரொடு ஆர் விகுதி பெற்றும் போற்றப் பெறுகின்றது.