பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய புராணம் 67 சேக்கிழார் இவற்றின் அடிப்படையில் தம் நூலைப் பன்னிரண்டு சருக்கங்களாக அமைத்து 4286 பாடல்களில் எழுதியுள்ளார். முதல் சருக்கமாகத் திருமலைச் சருக்கம் அமைய (கயிலை மலை நிகழ்ச்சி, நாட்டுவளம், நகர்வளம் திருத்தொண்டத்தொகை பாடியது வரை சுந்தரர்தம் தொடக்க வாழ்வு முதலியன), பின் பதினொரு சருக்கங்களை யும் சுந்தரர் தம் திருத்தொண்டத் தொகையின் ஒவ்வொரு பாடலின் முதல் தொடரையே சருக்கப் பெயராக அமைத் துள்ளார். தில்லைவாழ் அந்தணர் சருக்கம், இலைமலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம் திருநின்ற சருக்கம், வம்பறாவரிவண்டுச் சருக்கம், வார்கொண்டவன முலையாள் சருக்கம், பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம். மன்னியசீர்ச் சருக்கம் என அவை அமைகின்றன. அவற்றுள் முன்னவை ஐந்தும் முதற் காண்டமாக அமைய, பின்னவை ஏழும் இரண்டாம் காண்ட மாக அமைகின்றன. பெருங்காப்பியத்துக்கு ஒரு முக்கியத் தலைவன் இருக்க வேண்டுமாதலாலும் இந்நூலில் அவ்வாறாய தலைவன் இல்லாமல் பலர் வரலாறு கூறப்பெறுவதாலும் இது பெருங் காப்பியமாகாது என்பர் சிலர். சிலர் இறைவனே இதன் பாட்டுடைத் தலைவனாவன். எனவே இது பெருங் காப்பியமே என்பர். ஆயினும் இதில் பாட்டுடைத் தலைவர் சுந்தரமூர்த்தி நாயனார் என்பதும் அவர் வரலாறே நூல் முழுவதும் தொடர்ந்து வருவதென்பதும் அறியக்கிடக் கின்றது. சுந்தரர் திருநாவலூரில் பிறந்தவராயினும் பெரும் பாலும் பரவையாருடன் திருவாரூரில் வாழ்ந்தவராதலாலும் இந்நூலுக்கு மூலகாரணமாகிய திருத்தொண்டத் தொகை இத்திருவருர்தேவாசிரிய மண்டபத்தை அடுத்தே தோன்றிய தாதலாலும் இந்த ஊரும் இந்த நாடுமே காப்பியத்தின்