பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 படும் கல்வி நிலையங்களின் பணிகளில் முற்றும் ஈடுபட்டுள்ள மையின் என் எழுத்துப் பணி குறைவாகவே உள்ளது. இடையில் அன்பர்தம் வேண்டுகோளுக்கென எவ்வெப் போதோ அமைந்த கட்டுரைகளை இவ்வாறு தொகுத்து வெளியிடுவதே தற்போது என்னால் இயலும் நெறியாக உள்ளது. ஆம்! இந்த வள்ளியம்மாள் கல்வி அறத்தின் வெள்ளிவிழா இன்று நடைபெறுகிறது. இவ்வெள்ளி விழா வெளியீடாகவே இந்நூல் வருவதை எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன். . - - என்னைப் பெற்று வளர்த்துப் பெரியவனாக்கி, நாட்டில் உலவச் செய்த என் அன்னைக்கு ஆற்றும் இந்த அறப்பணி கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் சிறக்க வளர்ந்துள்ளது. இந்த நாளில் இதன் வளர்ச்சிக்கு உதவிய எல்லா அன்பர் களுக்கும் என் வாழ்த்தினையும் வணக்கத்தினையும் செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். இந்தப் பணிகளுக் கிடையில் என்னை இக்கட்டுரைகளை எழுத வைத்த அன்பர் களுக்கும்,என் நன்றி உரித்து. * இந்நூல் இன்று தக்கார் வெள்ளிவிழா வெளியீடாக வெளியிட, தக்கார் முதற்படி பெற, வெள்ளிவிழா நிகழ்ச்சிக்கு இடையில் வெளிவருகிறது. அவர்களுக்கும் நன்றிசெலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். . இந்நூலில் உள்ள கட்டுரைகளைத் தொகுத்தும் அச்சிடுங் காலை பிழைகளை ஒத்து நோக்கித் திருத்தி உதவியும் நின்ற பச்சையப்பர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் திரு. டாக்டர். சா. வளவன் அவர்களுக்கு என் நன்றி. நூலை ஏற்றுப் புரக்க உள்ள அனைவருக்கும் நன்றி கூறி அமைகின்றேன். - பணிவுள்ள, தமிழ்க்கலை இல்லம் . வள்ளியம்மாள் கல்வி அறம் | அ.மு. பரமசிவானந்தம் சென்னை-30, 13.3-1993 -