பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நந்தனின் ஆதனூர் 75 மன்னார் கோயில் பக்கத்தில் இருக்குமானால் அங்கிருந்து திருப்புன்கூருக்குச் சுமார் 30கல் கடந்து அந்நாளில் சென் றிருக்க மாட்டார். அப்படியே சிதம்பரத்தை ஒட்டியோ சற்று விலகிய வழியிலோ சென்றார் என்று கொண்டாலும் தம் ஊர் அருகிலுள்ள அப்போதே வழியில் சிதம்பரத்தைக் காணத் துடித்திருப்பார். ஆனால் திருப்புன்கூர் நந்தி விலகிய பின்பு தான் தில்லை பற்றியே சேக்கிழார் குறிப்பிடுகின்றார். மேலும் பல கோயில்களுக்கு அறப்பணி ஆற்றியதாகக் கூறப் படுகின்றது. ஆனால் திருப்புன்கூர், புள்ளிருக்குவேலூர் பக்கத்திலேதான் பல தலங்கள் உள்ளமையின், காட்டு மன்னார் கோயில் பக்கத்திலே தலங்கள் இல்லை. மேலும் அவ்வூரும் அதன் பக்கத்தில் உள்ள ஊர்களும் வயல் வளமும் பிற வளங்களும் பெற்ற நிலையை முதல் ஐந்து பாடல்களில் சேக்கிழார் விளக்குகிறார். அத்தகைய வளம் காட்டுமன்னார் கோயில் பக்கத்தில் பெருமளவு இல்லை என்பதை நான் இரண்டு இடங்களையும் நேரில் கண்டவனாதலால் திட்ட மாகச் சொல்லுவேன். இதனாலும் மயிலாடுதுறை வட்டத்தைச் சார்ந்த ஆதனூரே நந்தனார் பிறந்த ஊராகக் கொள்ளலாம். மேலும் அவர் ஊர் கொள்ளிடம் திரைக் கரத்தால் நலம் வாரி அளிக்கும் நீர் நன்னாட்டில் இருந்ததாகச் சேக்கிழார் குறிக்கிறார். (1)காட்டுமன்னார் கோயிலோ அதைச் சார்ந்த நிலத்தையோ அவ்வாறு அன்றும் இன்றும் யாரும் கூறுவ தில்லையே! மற்றும் அவ்வூரிலிருந்து தில்லை நோக்கிப் புறப்பட்ட நந்தனார் தில்லை எல்லையில் மதில் புறத்து இருக்க. இறைவன் ஆணையால் தில்லை வாழ் அந்தணர் தீ வளர்த்து அதில் மூழ்கச் சொல்லுகிறார். பின் நந்தனார். அத்தியில் மூழ்கி அம்பலவனைக் கண்டு இரண்டறக் கலக்கிறார்.