பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 நல்லவை ஆற்றுமின் விரிவையும் தொலைவையும் பிற இயல்புகளையும் காண முடியாது திகைப்பதையும் வெளியிட்டிருந்தது. பழங்காலப் புராணக்காரர்கள் நம் அண்டத்தில் நாம் காணும் சூரியனைப் போல் பன்னிரண்டு சூரியன்கள் உண்டென்றும் ஒவ்வொரு சூரியனைச் சுற்றியும் எண்ணற்ற கோளங்கள் உருள்கின்றன என்றும் கூறுவர் (இந்த எல்லையை இன்றைய விஞ்ஞானிகள் தொட முடியவில்லை), இத்தகைய அண்ட கோளங்களை எண்ணிப் பார்ப்பின்-கச்சியப்பரைக் காணின், ஒரு சிறு நிலப்பகுதியை ஒருசில ஆண்டுகளே ஆளவருபவர்கள் தம்மை மறந்து தரணி வாழச் செயலாற்றுவர். ஆனால் இன்று அத்தகைய நல்லவர் நாட்டில்-உலகில் இல்லையே. ஆயிரத்தெட்டு அண்டங்களை ஆண்ட சூரபதுமனுக்குத் தன் தொல்லுருவை அறுமுகன் காட்டுகின்றான். மாயை நீங்கி மதி பிறக்கிறது; வாய் பாடுகிறது. 'மீயுயர் வடிவங் கொண்டு மேவிய துதன் சொற்ற வாய்மைகள் சரதம் அம்மா! மற்றுயான் பெற்ற அண்டம் ஆயவை முழுதும் மற்றும் அறுமுகம் படைத்த செம்மல் தூயபொற் பதரோமத்தில் தோன்றியே கிற்குமன்றே (சூர. வனத்-435) என்று காட்டிய கச்சியப்பர் 1008 அண்டங்களை ஆண்ட சூரபதுமன் நிலையே இதுவானால் நம் போன்றோர் நிலை எத்தகையது என உணர்த்தித் தெளியவைக்கிறார். தெளிவார்

riחנu

எங்கோ சென்று லிட்டேன். இன்றும் சூரபதுமர்களும் இரணியர்களும் இராவணர்களும் உள்ளதாலே சக்தியாகிய வேல் என்னை எங்கோ ஈர்த்துச் சென்று உணர்வு தந்தது. மன்னியுங்கள். இந்த வேற்காட்டில் இன்று அச்சக்தியாகிய வேலே கருமாரியாகி நின்று காட்சிதந்து, நம்புவர்களுக்கு நல்லருளை நாளும் நாளும் வாரி வழங்குகின்றாள். இந்த