பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 நல்லவை ஆற்றுமின் நெறிகளை வற்புறுத்தியமையானுமே அந்நூல் தமிழில் இன்றளவும் சிறக்க வாழ்கின்றது. அதனாலேயே அந்த நூலினை மேலை நாட்டு அறிஞராகிய போப் அவர்களும் நம்நாட்டு அறிஞர்களாகிய கனகசபைப்பிள்ளை, கிருஷ்ண சாமி ஐயங்கார், ASP ஐயர் போன்ற பலரும் போற்றிப் பாராட்டியுள்ளனர். மேலும் பெளத்தம் தமிழ் நாட்டில் நிலை கெட்ட போதிலும் மணிமேகலை அதன் சீரிளமைத் திறம் குன்றாவகையில் சிறக்க வாழ்கின்றது. தற்போது மணிமேகலையைத் தவிர்த்து மற்றொரு பெளத்தர்தம் தமிழ் முழு நூலாகக் காண்பது 'வீரசோழியம்’ என்னும் இலக்கண நூலேயாகும். இதன் ஆசிரியர் புத்த மித்திரனார். தம்மை ஆதரித்த வீரராஜேந்திர சோழன் பெயரால் இதை அமைக்க நினைத்தமையின் வீரசோழியம்' என இதை அமைத்தார். இது மணிமேகலையைப் போன்று சிறக்க வாழவில்லை. இந்நூலுள் தமிழ் மரபுக்கு ஒவ்வாத சில இலக்கண மரபுகளை எடுத்துக்காட்டி இதன் ஆசிரியர் விளக்க நினைத்தமையே அதற்குக் காரணமாகும். தமிழ் மரபுக்கு மாறுபட்ட வகையில் அமைந்ததேனும், கச்சியப்ப முனிவரின் முதல் பாடலின் முதல் தொடராகிய திகடச் சக்கர' என்னும் சொற்றொடரின் புணர்ச்சி இலக்கணத்துக்கு இந்நூலே ஏதுவாக நின்றமை நாடறிந்த ஒன்று. இந்த வீரசோழியத்தை திரு. சி. வை. தாமோதரம் பிள்ளை அவர் கள் 1881இல் அச்சிட்டிராவிட்டால் இதுவும் பிற பெளத்த நூல்களே போன்று முற்றும் கிடைக்கா வகையில் மறைந் திருக்கக்கூடும். இந்நூலைத் தவிர்த்து வேறு பல நூல்களையும் பெளத்தர்கள் இயற்றித் தமிழுக்கு வளம் சேர்த்தனர். எனினும் அவையாவும் வாழவில்லை. சிலவற்றுள் ஒரு சில பாடல்கள் மட்டுமே கிடைக்கின்றன. ஒரு சிலவற்றுள் ஒரு