பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 கல்லவை ஆற்றுமின் யாக நின்றார் என்பது பொருந்தும். மேலும் அவர்தம் நடையும் மிக எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கும் என்பர். - - - தேசபக்தன்' என்ற இதழுக்கு முதன்முதல் திரு.வி.க. அவர்கள் ஆசிரியராக இருந்தார். அவருக்குப் பிறகு ஐயர் அவர்களே 1920இல் ஆசிரியர் பொறுப்பேற்று நல்ல தமிழ் மரபைக் காத்துக் கட்டுரைகள் எழுதினார். சிலவற்றை அக்காலத்திலிருந்த அன்னிபெசண்ட் அம்மையார் அவர்கள் அவர்தம் 'New India என்ற ஆங்கில இதழில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டமை ஐயர்தம் எழுத்துத் திறனை நன்கு விளக்கும். மற்றும் இவர்தம் உணர்வூட்டித் தட்டி எழுப்பும் திறன் வாய்ந்த கட்டுரை ஒன்றிற்காகவே இவர் சிறை செல்ல நேர்ந்தது என்பதும் இங்கே குறிப்பிட வேண்டியதாகும். தோற்றத்தில் எளிமையும் உளத்தில் தூய்மையும் கொண்டு ஐயர் அவர்கள் ஆற்றிய தமிழ் இலக்கியப்பணி அளவிலே இனி, அவர்தம் மொழிபெயர்ப் பினால் செய்த இலக்கியப்பணி பற்றிச் சிறிது நோக்குவோம். கம்பரது கவியில் தோய்ந்த ஐயர் அவர்கள் பலவகையில் அவர்தம் இராமாயணத்தை ஆராய்ந்து பாத்திரங்களைப் பற்றியும் பிறவற்றைப் பற்றியும் எழுதியுள்ளார். தில்லித் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட இதன் முதல்பதிப்பை தில்லி வித்தியாபவன் இரண்டாவது வெளியிட்டுள்ளது. தமிழ் நாட்டில் ஒருவருமே அதுபற்றி எண்ணாதது வியப்பல்லவா! வான்மீகத்தைக் கம்பர் கதைக்காக எடுத்துக் கொண்டாரே ஒழிய அதை அப்படியே மொழிபெயர்க்க வில்லை என்பதும் அதில் காட்டிய பல மரபுகளைத் தொடாமல் தமிழ் மரபுக்கு ஏற்பக் கதையினையும் மாற்றி எழுதியமையே கம்பரை என்றும் வாழவைக்கிறது என்பதும் நாம் அறிவோம். இந்த உண்மையினை ஐயரவர்கள் தம்